Home
Music

புதிய ஆர்பிட்சவுண்டு ஸ்டீரியோ சிஸ்டம்- சிறப்பு பார்வை

By Super
புதிய ஆர்பிட்சவுண்டு ஸ்டீரியோ சிஸ்டம்- சிறப்பு பார்வை
சிறந்த சவுண்ட்பார்களை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதற்கான் காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டம் பார்ப்பதற்கு மிக சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இதில் கிரிஸ்டல் க்ளியர் ஒலி துல்லியமாக இருக்கும். ஆனால் இதை வைப்பதற்கு நமக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவைப்படும். ஆனால் நாளடைவில் அதை நாம் நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.

குறிப்பாக ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டம் 100 மிமீ உயரமும், 605 மிமீ அகலமும் 110 மிமீ பரப்பும் கொண்டுள்ளது. இதன் எடை 8 கிலோவாக இருப்பதால் இதை ஒரு இடத்திலிருந்த வேறு இடத்திற்கு மாற்றுவது சற்று சிரமமாக இருக்கும்.

ஆனால் நாளடைவில் அது பழகிவிடும். இது ஐபோட் டோக் கொண்டுள்ளதால் இதை ஐபோடுடன் இணைத்து நமக்கு விருப்பாமான இசையைக் கேட்டு மகிழலாம். இந்த ஸ்பீக்கர்கள் மெட்டல் கிரில் மூலம் மூடப்பட்டுள்ளதால் இது எளிதில் சேதமடையாது. மேலும் இதன் துணை ஊபரும் அபாரமாக இருக்கிறது. மேலும் இதில் ரிமோட் கட்டுப்பாடு வசதியும் இருக்கிறுது.

ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டம் ஒரு 3ஜி டிவைஸ் ஆகும். அதாவது இதன் ஸ்டீரியோ ஒலி அமைப்பு 501 சரவுண்ட் ஒலி அமைப்பைக் கொண்டது. இதன் 100 வாட் ஆம்ப்ளிபையர் தரமான கிரிஸ்டல் க்ளியர் தெளிவை வழங்கும் சக்தி கொண்டது.

மேலும் இதன் ஆம்ப்ளிபையர் ஆப்டிக்கல் மற்றும் ஆர்சிஎ போன் போன்ற இன்புட்டுகளைக் கொண்டுள்ளது. அதனால் இது கோஆக்சியல் டிஜிட்டலையும் சப்போர்ட் செய்யும். இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது 3.5எம்எம் ஜாக்கையும் சப்போர்ட் செய்யும்.

ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டம் தரமான இசையைத் தரவல்லது. இது வயர்லஸ் வசதி கொண்டிருப்பதால் இதை டிவிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டால் போதும். டிவியில் படம் பார்ப்பது அலாதியாக இருக்கும். மேலும் இதை கேளிக்கை விருந்துகளிலும் பயன்படுத்தலாம்.

அது நமது விருந்து நிகழ்வை ஒரு உற்சாகத் தளமாக மாற்றிவிடும். ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டத்தின் விலை ரூ.19500 ஆகும். நாமும் வாங்கி மகிழலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X