ஆவலைத் தூண்டும் புதிய சோனி ப்ளே ஸ்டேஷன்!

Posted By: Karthikeyan
ஆவலைத் தூண்டும் புதிய சோனி ப்ளே ஸ்டேஷன்!

சோனி அடுத்த தலைமுறைக்கான புதியதொரு ப்ளேஸ்டேசனைக் களமிறக்குவதில் தீவிரமாக இருக்கிறது. இந்த புதிய ப்ளேஸ்டேசனுக்கு ஆர்பிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த பெயர் ஒருவேளை ஆர்பிஸ் விட்டா என்றும் மாறலாம் என்று வதந்திகளும் வருகின்றன. ஆர்பிஸ் என்றால் வட்டம் அல்லது வளையம் என்று பொருள். எனவே இந்த ஆர்பிஸ் விட்டா என்றால் வாழ்க்கை வட்டம் அல்லது வளையம் என்று பொருள்படும்.

இந்த புதிய ஆர்பிஸ் விட்டாவைப் பற்றி குறைந்த தகவல்களே வந்திருக்கின்றன. ஆனாலும் சோனியின் ரசிகர்கள் இந்த ப்ளேஸ்டேசனைப் பற்றி அறிவதில் மிக பரபரப்பாக காணப்படுகின்றனர்.

இந்த ஆண்டு இறுதிக்கும் இந்த ப்ளேஸ்டேசன் வந்துவிடும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த புதிய ப்ளேஸ்டேசன் வீடியோகேம் பிரியர்களின் சொர்க்கபுரியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமிருக்காது.

இந்த புதிய கேமிங் சாதனம் எஎம்டி எக்ஸ்64 சிபியு மற்றும் எஎம்டி சதர் ஐலேண்ட்ஸ் ஜிபியு கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதன் மூலம் வீடியோ கேமை 4096 x 2160 பிக்சல் ரிசலூசனில் பார்க்க முடியும். அதுபோல் 3டி கேமிங் அனுபவமும் இந்த ப்ளேஸ்டேசனில் தடையில்லாமல் கிடைக்கும் என நம்பலாம்.

ஆர்பிஸ் சாதனம் பிஎஸ்3 கேம்களை சப்போர்ட் செய்யாது. அதற்காக சோனி ஒரு தனியான பிஎஸ்என் கணக்கைத் தொடங்க இருக்கிறது. அதன் மூலம் இதைப் பயன்படுத்துவோர் தனது கணக்கை லாக் செய்ய முடியும். அதனால் அடுத்தவர் அதைப் பயன்படுத்த முடியாது.

ப்ளூரே டிஸ்குகள் மற்றும் ப்ளேஸ்டேசன் நெட்வொர்க்குக்கான கேம்களை வாங்கிய பின் ப்ளேஸ்டேசன் அக்கவுண்டை லாக் செய்ய வேண்டும். இதை மீண்டும் அடுத்தவருக்கு விற்றால் எல்லா கேம்களும் கிடைக்காது. குறிப்பிட்ட கேம்கள் மட்டுமே கிடைக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் இந்த ப்ளேஸ்டேசன் இப்போதே சோனி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதென்றால் அது மிகையாகாது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot