Home
Music

ஓலாஜிக் வழங்கும் புதிய ரோபோ மியூசிக் ப்ளேயர்

By Super
ஓலாஜிக் வழங்கும் புதிய ரோபோ மியூசிக் ப்ளேயர்
ஆட்டோமேட்டட் ரோபோட் மீயூசிக் ப்ளேயர்கள் சமீபத்திய ட்ரென்டாக இருக்கின்றன. ஓலாஜிக்கின் இந்த புதிய மீயூசிக் ப்ளேயர் 2 சக்கரங்களும், 2 கைகளும், தலையும் அதுபோல் நிற்பதற்கும் நடப்பதற்கும் 2 சக்கரங்களையும் கொண்டு ஒரு ஆண்ட்ராய்டு போன் மூலம் ரிமோட் கண்ட்ரோல் செய்யும் வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ப்ளூடூத் மூலம் இதில் இசையை வழங்குகிறது. இதை நாம் நடனமாட வைக்க முடியும்.

ஓலாஜிக்கின் இந்த புதிய படைப்பு ஒரு பரிசோதனை முயற்சி அல்ல. இந்த இசைப் பேழையை வாங்க நாம் ஓலாஜிக்கை நேரடியகத் தொடர்பு கொள்ளலாம். இந்த புதிய பேழை ரூ.19636 (400 அமெரிக்க டாலர்) ஆகும். இதிலிருக்கும் ரோபோட் ஒரு மனிதனைப் போலவே செயல்படும். அதனால் பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக அதே நேரத்தில் கவரக்கூடியதாக இருக்கும். அதனால் இதை பலரும் வாங்குவர் என நம்பலாம்.

இந்த எம்பி மிக அருமையாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மார்பு பகுதியில் தரமான ஆடியோ சிஸ்டம் உள்ளது. இதன் பின்புறம் க்ரேடில் உள்ளது. மேலும் இதை இயக்கக்கூடிய கட்டுப்பாட்டு பட்டன்களும் இதில் உள்ளன. மேலும் இதன் தலையை நாம் நீக்கிவிட்டு ஐபேடையும் இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

ஏற்கனவே ஸ்மார்ட் பேன் ரோபோட்டுகள் வந்திருக்கின்றன. அவை பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும். ஜப்பானின் ஈகர் கோ லிமிட்டட் டெலினாய்டு ஆர்1 என்ற டெலிபிரசன்ஸ் ரோபோட்டை ஆகஸ்ட் 2010ல் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த ரோபோட் மொட்டைத் தலை கொண்டு மெல்லிய தோலுடன் கை கால்களுடன் வந்தது. இதில் இண்டர்நெட் வசதியும் உள்ளது. அதுபோல் இதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும்.

செப்டம்பர் 2010ல் எல்பாய்ட் பி1 அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் டெலினாய்டு ஆர் 1ஐப் போல் மனிதத் தோற்றத்துடன் இருந்தது. இது மொபைல் போனுடன் வந்தது. இந்த டெலினாய்டு மற்றும் எல்பாய்டு ஆகிய இரண்டு ஹிரோஷி இஷிகுரோ ஒசாகா பல்கலைக் கழகத்தின் அட்வான்ஸ்ட் டெலிகம்யூனிகேசன்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டால் டிஸைன் செய்யப்பட்டன.

எல்ஜி நிறுவனமும் ஒரு ஹோம்-போட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் ரோபோ கிங் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது மனித வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. அது வட்ட வடிவத்துடன் அதே நேரத்தில் ரோபோட்டை ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்களோடு இணைக்கும். இதிலிருக்கும் கேமரா மூலம் நாம் லைவ் வீடியோவைப் பார்க்க முடியும். அதுபோல் இது வாக்கும் க்ளீனரையும் கொண்டிருக்கும். இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.35000 முதல் ரூ.50000 வரை இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X