ஐபாட் ஷஃபுல் சாதனத்திற்கான புதிய ஒயர்லெஸ் ஹெட்போன்!

Posted By: Staff
ஐபாட் ஷஃபுல் சாதனத்திற்கான புதிய ஒயர்லெஸ் ஹெட்போன்!

இசை என்னும் இன்ப பெரு வெள்ளத்தில் மூழ்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒர் அரிய வாய்ப்பை கொடுக்க

இருக்கிறது ஓடிடிஐ-01 என்ற புதிய ஒயர்லெஸ் ஹெட்போன்.ஆம், இது ஐபாட் ஷஃபுல் சாதனத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனிமையான இசையை எந்த நேரமும் கேட்டு மகிழ முடியும். இலகு எடை கொண்ட இந்த ஒயர்லெஸ் ஹெட்போனை எளிதாக கையாளலாம். வயர் மூலம் இணைக்கப்படும் ஹெட்போன்கள் அதிக சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த ஓடிடிஐ-01 ஹெட்போன் வயர்லெஸ் வசதி கொண்டது.

இந்த புதிய ஐபாட் ஹெட்போன் நைலான் பிளாஸ்டிக் மெட்டீரியலால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் குஷன் ஸ்பீக்கர் பகுதி மட்டும் உயர்ந்த வகை சிலிக்கான் மெட்டீரியலால் ஆனது. குறைந்த எடை கொண்டு செய்யப்பட்டதால் இதனை காதில் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்கும் போது சுகமாக இருக்கும். மேலும், இது காதில் கனக்கச்சிதமாக பொருந்தும்.

இதில் உள்ள இயர் கப் கிரே, ப்ளாக், பிங்க் போன்ற கண்கவரும் நிறத்தில் உள்ளது. எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தை தேர்வு செய்யது கொள்ளலாம். ஆப்பிள் ஐபாட் ஷஃபுல் மாடலுக்கு இணையாக சொல்லும் அளவு தொழில் நுட்பம் இந்த ஓடிடிஐ-01 ஹெட்போனில் உள்ளது என்று கூறலாம்.

30 எம்எம் ஆடியோ ஸ்பெக்ட்ரம் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மினி மீடியா பிளேயரை கூட இதில் எளிதாக பொருத்தி கொள்ளலாம். இந்த புதிய ஓடிடிஐ-01 ஐபாட் ஷஃபுல் ஹெட்போன், இரைச்சலை கொடுக்காமல், துல்லியமான இசையை மட்டும் கொடுக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்