ஆப்பிள் சாதனங்களுக்கான ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபயர்!

ஆப்பிள் சாதனங்களை மியூசிக் சிஸ்டத்துடன் இணைக்கும் வகையில் புதிய ஆம்ப்ளிஃபயர் மார்க்கெட்டிற்கு வருகிறது. ஐடூ என்ற பெயரில் இந்த ஆம்ப்ளிஃபயரை நியூபோர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய ஆம்ப்ளிஃபயரில் உள்ள தொழில்நுட்பம் டிஜிட்டல் ஆடியோ சிக்னல்களை அனலாக் சிக்னல்களாக மாற்றிவிடும். இதனால், ஆப்பிள் சாதனங்களுடன் இணைக்கப்படும் ஸ்பீக்கர்களில் மிகத்துல்லியமான இசையை கேட்கும் வசதியை இந்த ஆம்ப்ளிஃபயர் வழங்கும். நியூபோர்ஸ் ஐக்கன் ஐடூ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஆம்ப்ளிஃபயர் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நியூபோர்ஸ் ஐகான் ஐடூ சிறப்புகளைப் பார்த்தால் அது மிகவும் எடை குறைந்து இருக்கிறது. இதன் ஒலி அமைப்பு மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது. இதில் ஏராளமான இணைப்பு வசதிகள் உள்ளன. அதோடு 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் இதில் உள்ளது. இதன் மொத்த பரப்பைப் பார்த்தால் அது 6 இன்ச் x 4.5 இன்ச் x 1இன்ச் ஆகும்.
இந்த ஐடூ ஆம்ப்ளிஃபயர் மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் மிகவும் அழகாகவும் இருக்கிறது. இது 4 நிறங்களில் வருகிறது. இதன் பின்புறத்தில் இணைப்பு போர்ட்டுகள் உள்ளன. ஆப்பிள் சாதனங்களை இந்த ஆம்ப்ளிஃபயர் மூலம ஹோம் தியேட்டருடன் இணைக்க முடியும்.
இந்த இடோ டிவைஸ் 24 பிட்/96கிஹெர்ட்ஸ் சக்தியைக் கொடுக்க வல்லது.இதன் ப்ரீக்வன்சி 10 ஹெர்ட்ஸ் முதல் 20கிலோ ஹெர்ட்ஸ் வரை ஆகும். இந்த புதிய ஹெட்போன் ரூ.12,000 விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications