நோக்கியா மான்ஸ்டர் கூட்டணியில் புதிய வயர்லஸ் ஹெட்செட்

Posted By: Karthikeyan
நோக்கியா மான்ஸ்டர் கூட்டணியில் புதிய வயர்லஸ் ஹெட்செட்

நோக்கியா நிறுவனம் மான்ஸ்டர் நிறுவனத்தோடு கூட்டணி வைத்து நோக்கியா பியூரிட்டி ப்ரோ என்ற வயர்லஸ் ஸ்டீரியோ ஹெட்செட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்செட் நோக்கியாவின் முதல் வயர்லஸ் பியூரிட்டி ஹெட்செட் ஆகும்.

இந்த வயர்லஸ் ஹெட்செட்டை ப்ளூடூத் அல்லது என்எப்சி வழியாக நோக்கியா ஸ்மார்ட்போனோடு இணைக்க முடியும். அதன் மூலம் சூப்பரான பாடல்கள் மற்றும் இசையைக் கேட்டு மகிழலாம்.

இந்த ஹெட்செட் அட்டகாசமான வண்ணங்களில் வருகின்றது. அதாவது சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் வருகின்றது. இந்த ஹெட்செட்டில் நாய்ஸ் கேன்சலேசன் தொழில் நுட்பம் உள்ளதால் வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சல் இந்த ஹெட்செட்டிற்குள் நுழையாது. ஆகவே தெளிவாக பாடல்களைக் கேட்க முடியும்.

இந்த ஹெட்செட்டை மடக்கி அழகாக ஒரு பையில் வைக்க முடியும். இந்த ஹெட்செட்டை மடக்கும் போது அது தானாகவே நின்றுவிடும். அதுபோல் இதை விரிக்கும் போது அது தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும்.

இந்த நோக்கியா பியூரிட்டி ஹெட்செட் 299 ஈரோவுக்கு அதாவது 376 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியி்ல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot