நோக்கியா லூமியா போன்களுக்கான அழகான குட்டி ஸ்பீக்கர்கள்

By Karthikeyan
|
நோக்கியா லூமியா போன்களுக்கான அழகான குட்டி ஸ்பீக்கர்கள்

மொபைல் போன் துறையில் பல வெற்றிகளைக் குவித்த நோக்கியா தனது லூமியா ஸ்மார்ட்போன்களுக்காக கையடக்க ஸ்பீக்கர்களைத் தயாரிக்க இருக்கிறது. அதற்காக ஜேபிஎல் நிறுவனத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஜேபிஎல் நிறுவனத்துடன் சேர்ந்து ப்ளேஅப் என்ற போர்ட்டபுள் ஸ்பீக்கர்களை நோக்கிய களமிறக்கத் தயாராக இருக்கிறது. இந்த ஸ்பீக்கர்களை நோக்கியாவின் லூமிய போன்களில் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்பீக்கர்கள் வயர்லஸ் தொழில் நுட்பத்தில் வருகின்றன. ப்ளாஸ்க்கால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்பீக்கர்களின் அவுட்புட் 89டிபி ஆகும். இந்த ஸ்பீக்கர்களின் பேட்டரி 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும் என்று நோக்கியா கூறுகிறது.

இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இவை அருமையான வண்ணங்களில் வருகின்றன. குறிப்பாக சியான், வெள்ளை, கருப்பு மற்றும் மஞ்சள் போன்ற கலர்களில் வருகின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் இந்த ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் இவை 187 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கின்றன. ஆனால் இவை இந்தியாவிற்கு எப்போது வரும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X