Home
Music

'ஒன்லி' இசை... குண்டு வெடித்தாலும் காதுக்கு கேட்காது!

By Super
'ஒன்லி' இசை... குண்டு வெடித்தாலும் காதுக்கு கேட்காது!

நவீன இரைச்சல் தடுப்பு தொழில்நுட்பத்துடன் புதிய ஹெட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது கிரியேட்டிவ் நிறுவனம்.

இசைப் பிரியர்களின் இனிய தோழர்களாக ஹெட்போன்களும், இயர்போன்களும் இருக்கின்றன. குறிப்பாக ஹெட்போன்கள் தரமான அதே நேரத்தில் மிகத் தெளிவான இசையை அளிக்கின்றன. அதுபோல் தெளிவான இசையை வழங்க வேண்டுமானால் அந்த ஹெட்போன் வெளிப்புற இரைச்சல் தடுப்பு வசதியைக் கொண்டிருக்க வேண்டும்.

பிரபல மின்னனு தயாரிப்பாளர்களான் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் இரைச்சல் தடுப்பு வசதி கொண்ட புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த இயர்போன்களின் பெயர்கள் இபி 600 மற்றும் இபி 660 ஆகும்.

இந்த புதிய கிரியேட்டிவ் ஹெட்போன்களை காதில் பொருத்தியிருக்கும்போது, மிக அருகில் ரயிலோ அல்லது விமானம் சென்றால் கூட, அந்த சத்தத்தை இந்த இயர்போன் உள்ளே விடாது என்று கிரியேட்டிவ் நிறுவனம் கூறுகிறது. எனவே, இந்த புதிய ஹெட்போன்கள் இசைப் பிரியர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பலாம்.

இந்த இரைச்சலைத் தடுப்பதற்காக இந்த ஹெட்போன்களில் நாய்ஸ் ஐசொலேசன் மற்றும் பேஸ் பூஸ்டிங் தொழில் நுட்பமும், நியோடிமியும் மேக்னட் மற்றும் டிரைவர்களும் உள்ளன. இந்த ஹெட்போன்கள் மிகவும் எடை குறைந்தவை. இவற்றை விமானத்தில் பயணம் செய்யும் போதுகூட பயன்படுத்தலாம்.

கிரியேட்டிவின் இந்திய விற்பனைப் பிரிவின் தலைவர் எர்னஸ்ட் சிம் கூறும் போது,"இந்த இபி ஹெட்போன்களை வீட்டில் மட்டும் அல்ல, எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். பயணம் செய்யும் போதும், இரைச்சல் மிகுந்த இடங்களில் இருக்கும்போது என எல்லா சூழ்நிலையிலும் இந்த ஹெட்போனில் தொல்லையின்றி பாடல் கேட்கலாம்," என்றார்.

இந்த இபி இயர்போனில் இருக்கும் நியோடிமியும் டிரைவர் 9மிமீ அளவைக் கொண்டுள்ளது. இது மிக மென்மையான சிலிகான் இயர்ப்ட்ஸுக்களைக் கொண்டிருப்பதால் நீண்ட நேரம் இவற்றை பயன்படுத்தினாலும் காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. இதிலிருந்து வரும் இசையும் மிக அருமையாக இருக்கும். இந்த ஹெட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சரியான விலையில் இந்த ஹெட்போன்கள் வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X