Home
Music

புதிய டிராவல் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியது நிக்ஸான்

By Super
புதிய டிராவல் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியது நிக்ஸான்
கைகடிகாரங்களின் உற்பத்திக்குப் பெயர்பெற்ற நிக்சன் நிறுவனம் ஆடியோ சம்பந்தமான பேழைகளையும் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் இப்போது புதிதாக 3 வெர்சன்களில் ஒரு புதிய ஆடியோ பேழையை நிக்சன் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று ஆர்பிஎம் ஆகும்.

இதை நமது காது மடல்களின் மேல் பொருத்தக் கூடிய டிஜே ஹெட்போன் ஆகும். இரண்டாவதின் பெயர் மைக்ரோ ப்ளாஸ்டர் ஆகும். இது ஒரு குறைந்த ப்ரொபைல் ஹெட் போன் ஆகும். 3வதின் பெயர் டிபிஎஸ் ஆகும். இது ஒரு அடக்கமான மற்றும் பயணத்திற்கு ஏற்ற ஒரு இசைப் பேழையாகும்.

நிக்சன் ஆர்பிஎம் உயர்தர அம்சங்களுடந் வருகிறது. இதில் டிஜே மானிட்டருக்கான 40எம்எம் ட்ரைவர் உள்ளது. இதில் உள்ள மெத்தை போன்ற அமைப்பு காதுக்கு இதமாக இருக்கிறது. மேலும் இதில் இன்டர் லாக்கிற் காயில்டு கேபிள் உள்ளதால் இதன் இணைப்பு வசதி மிக பக்காவாக இருக்கும். மேலும் இதில் மைக்ரோபோனுடன் கூடிய ரிமோட் கேபிள் உள்ளதால் இதை மிக எளிதாக ஐபோனுடன் இணைக்க முடியும்.

நிக்சன் மைக்ரோ ப்ளாஸ்டரைப் பார்த்தால் அது கஸ்டம் ட்யூன்ட் 8எம்எம் டைட்டைனியம் ட்ரைவரைக் கொண்டுள்ளது. அதனால் இதன் செயல்திறன் மிக அம்சமாக இருக்கும். மேலும் இதில் எர்கோனமிக்கலி டிஸைன்ட் கேபிள் உள்ளதால் இதில் இசைக் கேட்பது மிக அருமையான அனுபவத்தைத் தரும்.

இதை மொபைல்களில் இணைப்பதற்காக இதன் வலது மூலையில் ப்ளக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹெட்போன் கஸ்டம் மாடல்டு ட்ராவல் கேஸ் கொண்டுள்ளதால் இது மிகவும் பாதுகாப்பு வசதி கொண்டது. மேலும் இந்த டிவைஸ் டூவல் டியூரோ மீட்டர் சிலிகான் இயர் டிப்ஸ் கொண்டுள்ளதால் இதில் டேக்டிக்கல் இசை கேட்கும் அனுபவம் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவைஸ் இசை அமைப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நிக்சன் டிபிஎஸ்ஸைப் பார்த்தால் அது சிறியதாக இருந்தாலும் அதன் செயல் திறன் மிக அட்டகாசமாக இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது சிறியதாக இருந்து கொண்டு அதிரடி இசையை வழங்குகிறது. இந்த டிவைஸை எளிதாக நமது கை பையில் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் நமது பயணத்தின் போது மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். இதன் பேட்டரி பேக்கப் 6 மணி நேரம் ஆகும். இதன் மேல் புறம் அலுமினியம் கோட் கொண்டு வருகிறது. அதனால் இது பாதுகாப்பு மிகுந்தது ஆகும். இந்த டிவைஸ் கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் வருகிறது.

இவற்றின் விலையைப் பார்த்தால் நிக்சன் ஆர்பிஎம் மற்றும் நிக்சன் மாஸ்டர் ப்ளாஸ்டர் ரூ.10000க்கு கிடைக்கிறது. ஆனால் நிக்சன் டிபிஎஸின் விலை ரூ.4000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ்களின் விற்பனை பெரிய அளவில் இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X