Home
Music

நிகோன் வழங்கும் உயர் ரக கேமராக்கள்!

By Karthikeyan
நிகோன் வழங்கும் உயர் ரக கேமராக்கள்!

நிகோன் நிறுவனத்தின் 1 வரிசை கேமராக்கள் கண்ணாடி இல்லாத வசதியையும் அதே நேரத்தில் லென்சுக்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளன. இந்த கேமராக்கள் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை விட மிக அடக்கமான டிவைஸ்களாகும்.

இந்த கண்ணாடி இல்லாத கேமராக்களின் முக்கிய வரிசை எதுவென்றால் அவை நிக்கன் வி1 மற்றும் நிக்கன் ஜே1 ஆகும். இந்த கேமராக்கள் கட்டிங் எட்ஜ் கொண்டு வருகின்றன. அதோடு இதன் லென்சும் அட்டகாசமாக இருக்கும். அதுபோல் ஒரு புதுமையான சிஎக்ஸ் பார்மட் சென்சாரையும் இந்த கேமராக்கள் கொண்டிருக்கின்றன.

இந்த கேமராக்களில் நிக்கர் லென்ஸ் சிஸ்டம், உயர் வேகம் கொண்ட ஆட்டோ போக்கஸ் சிஎம்ஒஎஸ் இமேஜிங் சென்சார், அகலமான ஐஎஸ்ஒ ரேன்ஜ், 10.1 மெகா பிக்சல், நிக்கன் 1 லென்ஸ் மவுண்ட் சிஸ்ம், தூசு தடுக்கும் வசதி, கண் சென்சார், செல்ப் டைமர், எக்ஸ்போசர் மீட்டரிங் சிஸ்டம், எக்ஸ்போசர் காம்பன்சேசன் போன்ற எல்லா வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த கேமராக்கள் மின் திறனிற்காக இஎன்-இஎல்15 லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. இந்த பேட்டரி 350 ஷாட்களை வழங்குகின்றன. இந்த கேமராக்களின் எடை 294 கிராம்கள் மட்டுமே.

இந்த கேமராக்களின் முழு எச்டி மூவி ரிக்கார்டிங் ஒரு நிமிடத்திற்கு 30 ப்ரேம்களாக இருக்கும். மேலும் இந்த கேமராக்கள் நிக்கன் 1 லென்ஸ் மவுண்ட், 3 இன்ச் எல்சிடி திரை, எலக்ட்ரானிக் சட்டர், பில்ட் இன் ப்ளாஷ், செல்ப் டைமர், உயர் ரக ஆட்டோ போக்கஸ் சிஸ்டம் போன்ற வசதிகளை வழங்குகின்றன.

இந்த கேமராக்களின் மின் திறனிற்காக இஎன்-இஎல்20 லித்தியம் ஐயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி 230 ஷாட்களை வழங்குகிறது. இந்த கேமராக்களின் எடை 234 கிராம் மட்டுமே.

விலையைப் பொருத்தமட்டில் நிக்கன் வி1 கேமராக்கள் ரூ.46000க்கும் அதே நேரத்தில் நிக்கன் ஜே1 கேமராக்கள் ரூ.33000க்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X