Home
Music

எதையும் தாங்கும் வல்லமையுடன் புதிய நிகோன் கேமரா!

By Karthikeyan
எதையும் தாங்கும் வல்லமையுடன் புதிய நிகோன் கேமரா!

புகைப்படம் எடுப்பவர்கள் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது அவர்கள் எந்த தட்பவெப்ப நிலையிலும் தங்களது கேமராக்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். குறிப்பாக காட்டு வாழ்க்கையைப் படம் பிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் பயணம் செய்து காட்டுக்குச் சென்று படம் பிடிக்க வேண்டும்.

அங்கிருக்கும் மழை மற்றும் குளிர் போன்ற அந்த தட்பவெப்ப நிலையை கேமரா தாங்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட இடங்களுக்கு உயர்தர கேமராக்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அப்படி எடுத்துச் சென்றால் அந்த கேமராக்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட தட்பவெப்ப நிலையையும் தாங்கும் அளவிற்கு மிகவும் உறுதியான ஒரு புதிய கேமராவே நிக்கன் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்துகிறது.

நிகோனின் இந்த புதிய கேமராவின் பெயர் நிக்கன் எடபுள்யு 100 ஆகும். இந்த கேமராவை தண்ணீரால் கூட பாதிப்பு அடையாது.இந்த நிக்கன் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது மங்களான வண்ணக் கலவையில் வருகிறது. அதுபோல் இதைக் கரடுமுரடாகப் பயன்படுத்தினாலும் அதைத் தாங்கு சக்தி கொண்டிருக்கிறது.

அதுபோல் இந்த கேமராவிற்கு எந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும் இந்த கேமரா எந்தவித பாதிப்பும் அடையாது. அதுபோல் குளிர் தாக்கினாலும் இது உறுதியாக எதிர்கொள்ளும். இந்த புதிய நிக்கன் கேமராவில் 16 மெகா பிக்சல் பேக் லிட் சிஎம்ஒஎஸ் சென்சார் உள்ளது. அதுபோல் 5 எக்ஸ் ஆப்டிக்கல் சூமும் இந்த கேமரா கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமராவில் 1080பி வீடியோ ரிக்கார்டிங் வசதியும் உண்டு.

இந்த நிகோன் கேமராவின் டிசைன் மற்றும் உருவம் ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளன. மேலும் இந்த கேமரா ஒரு உறுதியான டிவைஸ் ஆகும். இந்த கேமரா ஆரஞ்ச், ஊதா, கருப்பு மற்றும் கேமோயுப்ளேக் போன்ற நிறங்களின் கலவையில் வருகிறது. இதில் உள்ள கட்டுப்பாட்டு பட்டன்கள் மிக உறுதியானவை. அதனால் இந்த கேமரா எந்த இழு இழுத்தாலும் அது வளைந்து கொடுக்கும்.

இந்த கேமராவின் முக்கிய தனிச் சிறப்பு என்னவென்றால் குளிராக இருந்தாலும் சரி அல்லது தண்ணீராக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. இது நீர் தடுப்பு வசதி கொணடிருப்பதால் தண்ணீருக்கடியில் 10 மீ ஆழத்தில் படம் எடுத்தாலும் படம் மிகத் துல்லியமாக இருக்கும்.

அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி கொண்டிருப்பதால் 1.5 மீ உயரத்திலிருந்து இந்த கேமராவைக் கீழே போட்டாலும் இது பாதிப்பு அடையாது. அதுபோல் இந்த கேமரா -10 டிகிரி தட்பவெப்ப நிலையிலும் அருமையாக இயங்கும் திறன் கொண்டது. இந்த நிகோன் எடபுள்யு 100 கேமராவின் விலை ரூ.26,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X