சிறந்த இசையை வழங்கும் எல் ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்

Posted By: Staff

சிறந்த இசையை வழங்கும் எல் ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்
எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் இன்டர்நேசனல் டைனமிக்ஸ் ஆஸ்திரேலியாவினால் (ஐடிஎ) சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2 ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர்களின் எடை 120 கிலோவாகும். மேலும் இவை 130 செமீ உயரம் கொண்டிருக்கின்றன.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் கேமரா உலகின் ராஜாவான கேனனோடு இணைந்து கபேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. சிறந்த ஸ்பீக்கர்களைத் தயாரிப்பதில் கபேஸ் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் தனித்தன்மையுடன் இருந்தாலும் இது இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லா ஸ்பீயர் ப்ராண்ட் ஸ்பீக்கர்களைப் போல் தோன்றுகின்றன.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் 4 வழி கோஆக்சியல யூனிட் கொண்டு 38செமீ ஊபருடன் ஹணிகோம் டோம் டையாப்க்ராம் கொண்டு இருக்கிறது. இதன் பேஸ் 250 முதல் 1000 வாட்ஸ் வரையிலான 4 டிஜிட்டல் ஆம்ப்ளிபயர்ளைக் கொண்டுள்ளது. இவை 117 டெசிபல் ஒலி அடர்த்தியை வழங்குகிறது.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டத்தின் அடுத்த சிறப்பைப் பார்த்தால் அதன் கபேஸ் ரூம் காம்பன்சேஷன் சிஸ்டமாகும். அதனால் அறை எவ்வாறு இருந்தாலும் சரி இதன் இசை வெள்ளம் தரமாக வழிந்தோடிக் கொண்டே இருக்கும். ஏனெனில் ஒரு சில ஸ்பீக்கர்கள் அறை சரியில்லாமல் இருந்தால் அதன் இசை எடுபடாமல் போகும். ஆனால் இங்கு இங்கு அப்படி இல்லை. இந்த எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் எந்த இடத்திலும் சிறந்த ஒலி அமைப்பை வழங்கும்.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டத்தை காபேசின் முழுமையான முதல் டிஜிட்டல் சிங்கிள் சானல் சைமல்காஸ்ட் சிஸ்டம் என்று அழைக்கலாம். இதன் ஆடியோ சிக்னல்கள் முழுமையான டிஜிட்டல் பார்மட்டோடு ஆம்ப்ளிபயர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ப்ரீஆம்பிளிபயர் அனலாக் மற்றும் டிஜிட்டல இன்புட்டுகளை வழங்குகின்றன. மொத்தத்தில் இந்த எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் தரமான டிஜிட்டலையும் அதே நேரத்தில் சிறந்த ஒலியையும் வழங்கும்.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் உண்மையில் தொழில் நுட்பத்தின் சிகரம் என்று அழைக்கலாம். இந்த புதிய ஸ்பீக்கர் சிஸ்டம்தான் காபேசின் வரலாற்றில் முழுமையான டிஜிட்டிலில் வந்த முதல் சிஸ்டம் என்று ஐடிஎ கூறுகிறது.

எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டத்தை கடைகளில் பெற முடியாது. மாறாக இன்டர்நேசனல் டைனமிக்ஸ் ஆஸ்திரேலியைவைத் தொடர்பு கொண்டு ரூ.600000 செலத்தினால் அவர்கள் இதை நமக்கு அனுப்பி வைப்பர். ஆனால் இந்த எல்ஓசன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படுமா என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot