Home
Music

ஆர்பிட்சவுண்ட் வழங்கும் ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்!

By Super
ஆர்பிட்சவுண்ட் வழங்கும் ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்!

ஆர்பிட்சவுண்ட், ஆப்பிளின் ஐபேடுக்கான ஒரு புதிய ஸ்பீக்கரைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஸ்பீக்கருக்கு டி9 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கு பல நிறுவனங்கள் தங்களது புதிய அக்சஸரிகளைத் தயாரித்து வழங்குகின்றன. ஆனால் ஆர்பிட்சவுன்டின் இந்த புதிய ஸ்பீக்கர் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

இந்த டி9 ஸ்பீக்கர் மேஜிக் ஸ்டீரியோ எபக்டைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கும். ஏற்கனவே ஆர்பிட்சவுன்ட் டி12 என்ற ஒரு ஐபோட் டோக்கை களமிறக்கி இருந்தது. அந்த டோக் மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதனால் இந்து புதிய ஸ்பீக்கரும் மக்களைக் வெகுவாக் கவரும் என்று கருதப்படுகிறது.

டி12 மற்றும் டி9 ஆகியவை அதன் உருவ அளவுகளில் வேறுபடுகின்றன. அதாவது டி9 ஸ்பீக்கர் டி12வைவிட சிறியதாக இருக்கிறது. இந்த டி9 ஸ்பீக்கர் 140 வாட்ஸ் ஆர்எம்எஸ் பவர் அவுட்புட் கொண்டிருப்பதால் இது தரமான ஆடியோவை வழங்கும். இதன் பக்கவாட்டிலும் மற்றும் முன்பகுதியிலும் சூப்பரான ஸ்பீக்கர்கள் உள்ளன. அதுபோல் இதில் ஒரு துணை ஊபரும் உண்டு. மேலும் இந்த ஸ்பீக்கரில் ஒரு ஐடிவைஸ் கனெக்டரும் உள்ளது.

இதன் துணை ஊபர் ஒரு டிவி சவுண்ட்பாராகவும் மற்றும் ஐபோட் டோக்காகவும் செயலாற்றும். இந்த ஸ்பீக்கர் சிம்பிள் டிசைனில் வந்தாலும் சிங்கமாக கர்ச்சிக்கும் என்று நம்பலாம்.

இந்த புதிய ஸ்பீக்கர் வரும் ஜூலையில் இங்கிலாந்து சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.10,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X