தெர்மல் டேக்கின் 3 வகை புதிய ஹெட்செட்டுகள்

By Super
|
தெர்மல் டேக்கின் 3 வகை புதிய ஹெட்செட்டுகள்
வீடியோ கேம் மற்றும் இசைக் கருவிகளைத் தயாரிப்பதில் தெர்மல் டேக் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. அவற்றின் தயாரிப்புகள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இருக்கும். குறிப்பாக இது வழங்கிய வீடியோ கேம் டிவைஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

தற்போது தெர்மல் டேக் புதிதாக இஸ்போர்ட்ஸ் ஷாக் ஸ்பின் ஹை டெபினிசன் ஹெட்செட்டை உயர்ந்த தரத்துடன் அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக இது 3 பிரிவுகளில் வருகிறது. அதாவது அடித்தட்டு, நடுத்தர மற்றும் உயர்தரம் என்று மூன்று பிரிவுகளில் வருகிறது.

தெர்மல் டேக் இஸ்போர்ட்ஸ் நியூ ஷாக் ஸ்பின் எச்டி ஹெட்செட் ஏராளமான சிறப்புகளுடன் வருகிறது. அதாவது இதன் நீளம் 50 மிமீ ஆகும். இதில் உள்ள பேஸ் இசைக்காக நியோடிமியும் மேக்னட் உள்ளது. மேலும் இது 15 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ் ரேஞ்ச் கொண்டுள்ளது.

இது 32 ஒஎச்எம் இம்பிடன்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவைஸ் 95டிபி +_ டிபி சென்சிட்டிவிட்டி கொண்டு வருகிறது. அதுபோல் இது 100எம் டபுள்யு இன்புட் சக்தியைக் கொண்டுள்ளது.

இந்த தெர்மல்டேக் இஸ்போர்ட்ஸ் நியூ ஷாக் ஸ்பின் எச்டி ஹெட்செட்டில் உள்ள மைக்ரோபோன் ஓம்னி டைரக்சன் கொண்டது. இதன் ப்ரீக்வன்சி ரேன்ஜ் 100 ஹெர்ட்ஸ் முதல் 10 கிலோ ஹெர்ட்ஸ ஆகும். இது 2.2 ஒஎச்எம் இம்பிடன்ஸ் கொண்டுள்ளது. இதில் உள்ள சவுண்ட் கார்டு 7.1 சேனல் வெர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் யுனிட்டைக் கட்டுப்படுத்த இதில் 4 பட்டன்கள் உள்ளன.

தெர்மல்டேக் இஸ்போர்ட்ஸ் நியூ ஷாக் ஸ்பின் எச்டி ஹெட்செட்டின் உயர்தர பிரிவைச் சேர்ந்த ஹெட்செட் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. கேமிங் அனுபவத்தைப் பொறுத்தவரை இந்த 3 வகை ஹெட்செட்டுகளும் மிக பக்காவாக உள்ளன. நடுத்தர ஹெட்செட் டைனமிக் ரெஸ்பான்ஸை வழங்குகிறது.

அடித்தள ஹெட்செட் வீடியோ கேமிற்கு அதிரடியான இசையை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் எப்எக்ஸ் வசதியை பயன்படுத்தலாம். மொத்தத்தில் பார்த்தால் இந்த ஹெட்செட்டுகள் துல்லியமான இசையை வழங்குகின்றன.

தெர்மல்டேக் இஸ்போர்ட்ஸ் நியூ ஷாக் ஸ்பின் எச்டி ஹெட்செட்டுகளின் விலையைப் பார்த்தால் அவை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X