கூகுலின் புதிய மியூசிக் சேவை....!

By Jagatheesh G
|

ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே கூகுலும் தனது மியூசிக் சேவையை தொடங்கி உள்ளது.
ஆப்பிளின் ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீஸ் என்ற சேவையைப் போல ஒரு புதிய சேவையைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிளோடு சரியான விதத்தில் போட்டி போட முடியும் என்று கூகுல் நம்புகிறது. மேலும் இந்த புதிய சேவை கூகுல் மியூசிக்கின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே கூகுல் தனது ப்ளே சர்வீசை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அதற்காக டுவன்டியத் சென்சுரி பாக்ஸ், டைம், பீப்பிள், இன்ஸ்டைல் மற்றும் ஒரு சில நிறுவனங்களோடு கூட்டணியும் அமைத்து இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மற்றும் பத்திரிக்கைகளை வழங்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கூகுலின் புதிய மியூசிக் சேவை....!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆப்பிள் தனது ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீசுக்கு 24.99 அமெரிக்க டாலர்களை வசூல் செய்கிறது. ஆனால் கூகுள் தனது புதிய மியூசிக் சேவையை இலவசமாக வழங்க இருக்கிறது. மேலும் இந்த சேவையை நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி இருக்கிறது.

இவற்றோடு கூகுள் வார்னர் மியூசிக் குரூப் என்ற நிறுவனத்தோடும் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தனது புதிய பாடல்களை ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொண்டிருக்கும். எனவே இந்த புதிய கூட்டணியின் மூலம் கூகுல் தினமும் புதிது புதிதான பாடல்களை வழங்கலாம் என்று எண்ணுகிறது.

மேலும் இந்த புதிய சேவையை ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி இருக்கிறது.
தற்போது இந்தியாவில் இந்த சேவை இன்னும் நிறுவப்படவில்லை .

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X