சாம்சங் கேலக்ஸி, ஐபோனுக்கான புதிய டோக்கிங் ஆடியோ சிஸ்டம்!

Posted By: Karthikeyan
சாம்சங் கேலக்ஸி, ஐபோனுக்கான புதிய டோக்கிங் ஆடியோ சிஸ்டம்!

ஜனவரியில் லாஸ் வேகாசில் நடைபற்ற நுகர்வோர் கண்காட்சியில் சாம்சங் ஒரு புதிய ஆடியோ டோக்கை அறிமுகம் செய்தது. அந்த ஆடியோ டோக் வரும் ஏப்ரல் 2012ல் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் அறிவித்திருக்கிறது. இந்த புதிய ஆடியோ டோக்கில் சாம்சங்கன் புதுமையன கைவண்ணத்தை பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆடியோ டோக்கின் தொடக்க நிலை மாடல்களையும் சாம்சங் அறிவித்திருக்கிறது. இந்த ஆடியோ டோக்குகள் சிறந்த ஒலி அமைப்புடன் மற்றும் படு ஸ்டைலாக வருகின்றன. அதாவது இவை ஸ்விஸ் பாக்ஸ் மற்றும் ஹார்ன் ஆகிய இரண்டு வடிவங்களில் வருகிறது.

இந்த இரண்டில் சாம்சங் டிஎ-இ670 என்ற ஆடியோ டோக் மிக எளிதாக கேலக்ஸி எஸ் மற்றும் ஆப்பிள் ஐஒஎஸ் சாதனங்களோடு வயர் இல்லாமலே மிக எளிதாக இணைந்துவிடும். இந்த சாதனத்தை வீடு மற்றும் அலுவலகம் என எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் துணை ஊபர் மிக அருமையான இசையை வழங்கும்.

இந்த இரண்டு ஆடியோ டோக்குகளையும் மினி யுஎஸ்பி அல்லது 30 பின் கனக்டர்கள் மூலம் கேலக்ஸி எஸ் மற்றும் ஆப்பிள் ஒஒஎஸ் சாதனங்களோடு இணைக்க முடியும்.

ஹார்ன் வடிவில் அமைந்திருக்கும் டிஎ இ550 ஆடியோ டோக் 10 வாட்ஸ் அவுட்புட்டைக் கொண்டிருக்கிறது. இதில் ப்ளூடூத் இணைப்பும் உண்டு. ஆனால் பெட்டி வடிவிலான டிஎ இ650 ஆடியோ டோக் 40 வாட்ஸ் அவுட்புட்டையும், 20 வாட்ஸ் துணை ஊபர் அவுட்புட்டையும், ப்ளூடூத் இணைப்பையும் மற்றும் 2.1 சேனல் ஒலியையும் கொண்டிருக்கிறது.

அதுபோல் பாக்ஸ் வடிவிலான இ670 ஆடியோ டோக் 100 வாட்ஸ் அவுட்புட்டையும், ப்ளூடூத் இணைப்பையும், 2.1 சேனல் ஒலியமைப்பையும் மற்றும் 60 வாட்ஸ் துணை ஊபரையும் கொண்டிருக்கிறது. மேற்சொன்ன இந்த ஆடியோ டோக்குகளின் விலைப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இவற்றைத் தவிர்த்து இன்னும் பல சாதனங்களை இந்த வருடம் அறிமுகப்படுத்தப் போவதாக சாம்சங் அறிவித்திருக்கிறது. குறிப்பாக ப்ளூ ரே ப்ளேயர்கள், ஹோம் தியேட்டர்கள் மற்றும் சவுண்ட்பார்கள் போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக இந்த சாதனங்கள் அணைத்தும் வயர்லஸ் தொழில் நுட்பம் கொண்டிருக்கும். மேலும் இவை தரமான ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த சாதனங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் மிக எளிதாகப் பொருந்தும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot