Home
Music

சோனி ஸட்1000 – ஒரு அல்டிமேட் இசைப் பேழை

By Super
சோனி ஸட்1000 – ஒரு அல்டிமேட் இசைப் பேழை
சோனியின் ஆண்ட்ராய்ட் மீயூசிக் ப்ளேயர் இப்போது சந்தையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. சந்தையில் இதுதான் சோனியின் தலைசிறந்த வாக்மேனாக கருதப்படுகிறது.

மேலும் இந்த சோனியின் புதிய மீடியா ப்ளேயர் ஆப்பிள் ஐபேடுகளுக்கு விலையிலும் தரத்திலும் கலக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. அதனால் இது கண்டிப்பாக ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பலாம். மேலும் இது வரை வந்த மீயூசிக் ப்ளேயர்கள் தராத சூப்பரான வசதிகளை அள்ளித் தெளித்திருக்கிறது.

இந்த புதிய சோனி ஸட்1000 4.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேயுடன் 480 X 800 பிக்ஸல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இது ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரீட் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. மேலும் இது என்விடியா டேக்ரா 2 மொபைல் டூவல் கோர் சிபியு கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் மிக அம்சமாக இருக்கும்.

மேலும் இதிலுள்ள எஸ்-மாஸ்டர் மிக்ஸ் ஒலி கேட்பவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இது டிஜிட்டல் இரைச்சல் கேன்சலேசனையும் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோட் டச்சை விட சேமிப்பில் பல மடங்கு இந்த சோனி மீடியா ப்ளேயர் முன்னிலையில் உள்ளது. அதாவது இதன் மெமரி சேமிப்பு 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் சப்போர்ட்டுடன் வருகிறது.

இதன் டபுள்யு பட்டனை அழுத்தினால் இது நேரடியாக நம்மை வாக்மேனிற்குள் அழைத்துச் செல்லும். மேலும் இது தொடர்பு வசதிகள் கொண்டிருப்பதால் ஆன்லைன் இசை வலைகளையும் அக்சஸ் செய்ய முடியும். அடுத்து இது மல்டி டாஸ்க் வசதி கொண்டருப்பதால் இதில் வீடியோ மற்றும் வீடயோ கேம்கள் விளையாட முடியும்.

சோனியின் ஸட்1000 டிஎல்என்எ வயர்லஸ் வசதி கொண்டிருப்பதால் நாம் டிவி, ஸ்பீக்கர்கள் போன்றவற்றோடு வயர் இல்லாமல் இணைக்க முடியும். மேலும் ஹச்டிஎம்ஐ போர்ட்டும் இதில் இருப்பதால் வயர் கொண்டும் இணைக்க முடியும். 16ஜிபி மெமரியுடன் வரும் சோனி இஸட்1000 ரூ.17500க்கும், 32ஜிபியுடன் வரும் இது ரூ.20500க்கும், 64ஜிபியுடன் வரும் சோனி இஸட்1000 ரூ.25900க்கும் இந்தியாவில் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X