இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு...!

ஹர்மான் நிறுவனம் சமீபத்தில் புதிய ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய ஹெட்போனுக்கு ஜேபிஎல் டெம்போ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்போன் அட்டகாசமான ஸ்டைலையும் அதே நேரத்தில் சூப்பரான ஆடியோ அவுட்புட்டையும் கொண்டிருக்கிறது.
இந்த ஹெட்போனில் இரண்டு 1.5 இன்ச் ட்ரைவர்கள் உள்ளன. மேலும் இந்த ஹெட்போன் குறைந்த எடையில் மிக அடக்கமாக வருகின்றது.
இந்த ஹெட்போனின் இயர்கப்புகள் வட்ட வடிவத்தில் மிக அழகாக வருகின்றன. இந்த இயர்கப்புகள் காதுகளை மிக முழுமையாக மறைத்துக் கொள்ளும். இந்த ஹெட்போன் கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் இயர்கப்புகளில் ஜேபிஎல்லின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இந்த இயர் கப்புகள் மிக மென்மையாக அதுபோல் மிக வசதியாக இருக்கின்றன.
இதன் ஹெட்பேன்டை தலையின் அளவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். மேலும் இந்த ஹெட்போன் மிகவும் தரமாக உறுதியாக உள்ளது. அதனால் தண்ணீர் பட்டாலும் இந்த ஹெட்போன் பாதிப்பு அடையாது.
இந்த ஹெட்போன் அருமையான பேஸ் இசையை வழங்குகிறது. மேலும் இதை ஐபோன், ஐபேட், ஐபோடு, லேப்டாப், டேப்லெட் மற்றும் எம்பி 3 ப்ளேயர் போன்ற எல்லா சாதனங்களிலும் இணைக்க முடியும். இந்த ஜேபிஎல் ஹெட்போன் ரூ.2800க்கு வருகிறது.


Click it and Unblock the Notifications