Home
Music

தங்கு தடையின்றி வீடியோ கேம் விளையாட புதிய மவுஸ்!

By Karthikeyan
தங்கு தடையின்றி வீடியோ கேம் விளையாட புதிய மவுஸ்!

வீடியோகேம் பிரயர்களுக்கு வீடியோ கேம்கள் தடையில்லாத பொழுதுபோக்கை வழங்கினாலும் ஒரு சில நேரங்களில் அவர்கள் திருப்தி அடைவதில்லை. ஜிபியு சக்தி கொண்ட கணினி இருந்தால்தான் வீடியோ கேம்களை மிகச் சிறப்பாக விளையாட முடியும்.

எனவேதான்,கேம் பிரியர்கள் கேமிங் கீபோர்ட் மற்றும் கேமிங் மவுசை விரும்புகின்றனர். குறிப்பாக கேமிங் மவுஸ்கள் பல விலைகளில் பல தரத்தில் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அந்த மவுஸ் ஸ்டைலாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதை மனதில் வைத்து ஜீனியஸ் நிறுவனம் இப்போது டெத்டேக்கர் என்ற புதிய கேமிங் மவுஸை அறிமுகப்படுத்துகிறது.

இந்த டெத்டேக்கர் ஒரு லேசர் மவுஸ் ஆகும். மேலும் இது எம்எம்ஒ மற்றும் ஆர்டிஎஸ் கேமர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மவுஸ் ஜீனியசின் ஜிஎகஸ் கேமிங் வரிசையில் வருகிறது.

இந்த டெத்டேக்கர் மவுசின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது மிகச் சிறந்த ஆர்டிஎஸ் மற்றும் எம்எம்ஒஆர்பிஜியைக் கொண்டிருக்கிறது. மேலும் 5 ப்ரோ பைல்களில் மேக்ரோ மேனேஜ்மென்ட் கீகளைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 100-5700 நெகிழ்வு தன்மை கொண்ட டிபிஐ ரிசலூசனை சப்போர்ட் செய்யும் பி்ல்ட் இன் ஓவர் க்ளாக்கிங் எஸ்சிஜிஐஐ என்ஜினைக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த டெத்டேக்கர் முழு வேகம் கொண்ட பொன் தகட்டால் ஆன யுஎஸ்பியைக் கொண்டுள்ளது. இதன் பேக்லைட் சிஸ்டம் 160 நிறங்களாகும். மேலும் இந்த மவுஸ் 9 பட்டன்களைக் கொண்டுள்ளது. அதுபோல் ஸ்கார்பியோன் யூசர் இன்டர்பேஸ் மற்றும் 6 நெகிழ்வு தன்மை கொண்ட மெட்டல் வெயிட்டுகள் (4.5ஜி X 6) மற்றும் தடையில்லாத கேமை வழங்க ஆன்போர்ட் மெமரி போன் வசதிகளை இந்த மவுஸ் வழங்குகிறது.

இந்த டெத்டேக்கர் எல்லா விதமாகன வீடியோ கேம்களையும் சிறப்பாக இயக்கும் தன்மை கொண்டது. இந்த மவுசின் விலை ரூ.5,000 ஆகும். ஆனால் இதன் செயல்பாடு மிக அபாரமாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X