ஜூபிட்டரின் நிலவில் நாசாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.. ஆடிப்போன விஞ்ஞானிகள்.. அப்படி என்ன கிடைத்தது?
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஜூபிட்டர் (Jupiter) கிரகத்திற்கு சொந்தமான நிலவான யூரோபாவில் (Europa) ஒரு எதிர்பாராத பொக்கிஷத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பிரபஞ்சம் முழுக்க நாசா தேடித்திரிந்த அந்த அதிசய பொருள், இப்போது வியாழன் கிரகத்தில் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) பிரபஞ்சத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில், இந்த தொலைநோக்கி மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் வானியலாளர்கள், தொலைநோக்கியிலிருந்து கிடைத்த தரவைப் பயன்படுத்தி வியாழனின் சந்திரன் யூரோபாவின் பனிக்கட்டி மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதியில், கார்பன் டை ஆக்சைட் (carbon dioxide) இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

நமக்குத் தெரிந்த தகவலின் படி, கார்பன் (carbon) என்பது வாழ்க்கைக்கு (life) இன்றியமையாத அங்கமாகும். இதன் பொருள், சமீபத்திய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பின் கண்டுபிடிப்பு, வேற்றுகிரகத்தில் உயிர் அல்லது வாழ்க்கைக்கான தேடலின் ஒரு முக்கியமான ஆதர படியாக மாறியுள்ளது என்று நாசா (NASA) கருதுகிறது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (European Space Agency) கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்த கார்பன் யூரோபாவின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கடலில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மறுபுறம், இது விண்கற்கள் (meteorites) போன்ற வெளிப்புற மூலங்களிலிருந்து உருவாகவில்லை என்று ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. சயின்ஸ் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள், யூரோபாவில் உள்ள தாரா ரெஜியோ (Tara Regio) என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இப்பகுதி புவியியல் அடிப்படையில் இளமையாக உள்ளது மற்றும் "குழப்பமான நிலப்பரப்பு (chaos terrain)" என்று அழைக்கப்படும் ஒரு விதியசமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
இங்கே, மேற்பரப்பில் பனி (ice) சீர்குலைந்துள்ளது. மேலும், இந்த மேற்பரப்பு கடலுக்கும் - பனிக்கட்டி மேற்பரப்புக்கும் இடையில் உருவான பொருள் பரிமாற்றமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தரவுகளை பகுப்பாய்வு செய்த இரண்டாவது தாளின் முதன்மை ஆசிரியரான சமந்தா ட்ரம்போவின் கூற்றுப்படி, ஹப்பிள் தொலைநோக்கியைப் (Hubble telescope) பயன்படுத்தி முந்தைய அவதானிப்புகள் தாரா ரெஜியோவில் கடலில் இருந்து பெறப்பட்ட உப்புக்கான (ocean-derived salt) ஆதாரங்களைக் காட்டியுள்ளன.

இப்போது அங்கு கார்பன் டை ஆக்சைடு இருப்பது நிறுவப்பட்டுள்ளது. இது உள் கடலில் (internal ocean) இருந்து வெளிவந்தது என்பதைக் குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணிப்பை முன்வைத்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தில் (solar system), வேற்று கிரக உயிர்கள் வாழும் இடமாக (hosts extraterrestrial life) யூரோபா நீண்ட காலமாக கருதப்படுகிறது.
உண்மையில், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration), வியாழனின் சந்திரன், யூரோபாவின் கிலோமீட்டர் தடிமனான பனிக்கட்டி ஓடுக்கு அடியில் நீரில் நீந்தக்கூடிய செல்போன் அளவிலான கிரையோபோட் (cryobot) ரோபோக்களை அனுப்பும் ஒரு பணியை பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது யூரோபாவில் அன்னிய உயிர் அல்லது வாழ்க்கைக்கான அடையாளங்களை தேடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த "கிரையோபோட்" பணி நிஜமாவதற்கு இன்னும் பல காலம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (American space agency) யூரோப்பா கிளிப்பர் மிஷன் (Europa Clipper Mission) 2024 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. 2030 ஆம் ஆண்டில் யூரோப்பாவிற்கு வரும்போது, பெரிய அளவிலான கருவிகளுடன் விரிவான தரவுகளை சேகரிக்க, பல பறக்கும் பயணங்களை இந்த பணி மேற்கொள்ளும்.
வியாழனின் நிலவில் கார்பன் டை ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பின் காரணமாக எதிர்கால கிளிப்பர் மிஷனில் சில மாற்றங்களை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள் என்று நாசா கூறியுள்ளது. நாசா தேடித்திரியும் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் மனித சக்திக்கு கிடைப்பது இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








