Home
Music

புதுமையை வழங்கும் புதிய குட்டி ஸ்பீக்கர்கள்!

By Super
புதுமையை வழங்கும் புதிய குட்டி ஸ்பீக்கர்கள்!

அதிகமாக பயணத்தில் இருப்போருக்கு ஹெட்போன்கள் இன்றியமையாதவை ஆகும். குழுவில் இருப்பவரோடு இசையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சிறிய ஸ்பீக்கர் அவசியம். ஏராளமான போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் இருந்தாலும் எல்லாமே தரமான ஒலி அமைப்பு வழங்குவதில்லை.

இந்த சூழலில் போர்ட்டபுள் சவுண்ட்ஸ் லேப் புதிய போர்ட்டபுள் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துகிறது. ஐமெயின்கோ 2 மற்றும் ஐமெயின்கோ எக்ஸ் என்ற இரண்டு மாடல்களில் இந்த போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த ஸ்பீக்கர்கள் மிகத் துல்லியமான இசையை வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கலாம்.

ஐமெயின்கோ 2 ஸ்பீக்கர் இரண்டு வேலைகளைச் செய்கிறது. அதாவது ப்ளேயர்களை தாங்கி வரும் பெட்டியாக இருக்கிறது. அதே நேரத்தில் ஸ்பீக்கர் சிஸ்டமாகவும் இருக்கிறது. இதன் மொத்த பரப்பு 3.8 இன்ச் x 2.4 இன்ச் x 5.7 இன்ச் ஆகும். இதன் எடை 255 கிராம் மட்டுமே.

இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி பேட்டரி மற்றும் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. அடுத்த பகுதி ப்ளேயரை கொண்டிருக்கிறது. இந்த ப்ளேயர் ஆப்பிளின் டிவைஸ்களுக்காக தயாரிக்கப்பட்டாலும் இந்த ப்ளேயரின் ஹெட்போன் ஜாக்கை கொண்டிருக்கும் எந்த டிவைசோடும் இதை இணைக்க முடியும். அதாவது இதை டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்றவற்றோடு இணைக்க முடியும்.

இந்த டிவைஸ் சிறியதாக இருந்தாலும் இதன் இசை மிக அபாரமாக உள்ளது. மேலும் இது 4 ஏஏஏ அளவு பேட்டரிகளைக் கொண்டுள்ளது.

ஐமெயின்கோ எக்ஸ் ஸ்பீக்கர் முந்தைய ஐமெயின்கோ 2 ஸ்பீக்கரை விட கூடுதல் வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த டிவையின் செயல் திறன் மற்றும் இதன் ஒலி அமைப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இதன் பேட்டரி லித்தியம்-ஐயன் வகையைச் சார்ந்ததாகும். அதனால் இதை ரீஜார்ஜ் செய்ய முடியும்.

ஐமெயின்கோ எக்ஸ் ஒரு ஜோடி ஹெட்போன் ஜாக்குகளுடன் வருகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 பேர் இந்த டிவைசில் ஹெட்போனை இணைக்க முடியும். அல்லது ஒருவர் ஹெட்போன் மூலமும் மற்றவர் ஸ்பீக்கர் மூலமும் பாடல் கேட்க முடியும்.

விலையைப் பொறுத்தமட்டில் ஐமெயின்கோ 2 ஸ்பீக்கர் ரூ.2,000க்கும் ஐமெயின்கோ எக்ஸ் ரூ.3,500க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X