Home
Music

அன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் அனைவருக்கும் அவர்களது தாய் மொழி என்பது உயர்வான ஒன்றுதான். மொழி என்பது தங்களது கருத்தை பரிமாற பயன்படும் ஒன்றாகும்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள்:

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள்:

உலகில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறதே அதில் அனைவருக்கும் ஒன்றான மொழி என்றால் எதை குறிப்பிடுவது. எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்துக் கொள்வோம், இந்தியா என்பது கூட்டாட்சி நாடாகும், இங்கு அனைவருக்கும் ஒரே மொழி என்று ஒன்று இல்லை. ஆனால் பிற மாநிலத்தவர்களிடம் கருத்தை பறிமாறிக் கொள்வதற்கு ஆங்கிலம் பிரதானமான ஒன்றாக உள்ளது.

இசையை தவிர வேறு என்ன இருக்க முடியும்:

இசையை தவிர வேறு என்ன இருக்க முடியும்:

உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான மொழி எதுவும் இல்லை இசைதான் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகில் எங்கு சென்றாலும் கலாச்சாரத்திற்கு என்று சொந்த பாடல்கள் இருக்கும். அதேபோல் பாடலகள், தாலாட்டு, கூட்டு நடனப்பாடல் என பாரம்பரிய முறையாக இருக்கும்.

315 கலாச்சாரங்களை பகுப்பாய்வு

315 கலாச்சாரங்களை பகுப்பாய்வு

உலகின் ஒரே மாதிரியான இசைகளை வெவ்வேறு மெட்டுகளுடன் காணலாம். 315 கலாச்சாரங்களில் இருந்து நூற்றாண்டுகால மதிப்புள்ள பாடல் பதிவுகளை விஞ்ஞானிகள் கலாச்சார பகுப்பாய்வு செய்தனர். பாடல்களின் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மெல்லிசைக் கூறுகள் உலகளவில் ஒத்திருப்பதாக ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. ஒரு பாடலின் நடத்தை சூழலை அதன் ஒலி அம்சங்களால் கணிக்க முடியும்.

இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு

ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளை தேடி அவற்றை ஒப்பிட்டு பாடல்களின் விரிவான தரவுத்தளம் ஒன்றை தொகுத்தனர். இந்த தொகுப்பை பாடலின் இயற்கை வரலாறு என்று அழைத்தனர்.

மனநிலை மாற்றும் சக்தி

மனநிலை மாற்றும் சக்தி

பொதுவாக நமது மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு. ஒரு மனநிலையில் இருக்கும் போது நமக்கு பிடித்த இசையோ அல்லது மெல்லிசை இசையோ கேட்டால் நமது எண்ணம் இலகுவாக மாறிவிடும். அதற்கு மொழி என்ற ஒன்று இல்லை.

பகுப்பாய்வு மிகவும் சிரமமாக இருந்தது

பகுப்பாய்வு மிகவும் சிரமமாக இருந்தது

30 புவியியல் பகுதிகளில் 86 கலாச்சாரங்களில் இருந்து 118 பாடல்களின் பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். பாடல்களை பட்டியலிடுதற்கும், ஒவ்வொரு பாடலும் எவ்வளவு காலம் பழமை வாய்ந்தது, அது பாடிய நாள், எத்தனை பாடகர்கள், பார்வையாளர்கள் யார் என பகுப்பாய்வு செய்வதற்கு கடினமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பாடல்கள் எழுதும் முறையை அறிந்துகொள்ள முயற்சி

பாடல்கள் எழுதும் முறையை அறிந்துகொள்ள முயற்சி

காதல் பாடல்கள், நடனப் பாடல்கள் மற்றும் தாலாட்டுப்பாடல்களில் கவனம் செலுத்திய ஆராய்ச்சியாளர் குழு உலகெங்கிலும் மனிதர்கள் எவ்வாறு இசையை எழுதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் முயற்சித்தார்கள்.

உலகின் ஒருமித்த மொழி இசை

உலகின் ஒருமித்த மொழி இசை

இறுதியாக ஒரு சமூகத்தின் இசை என்பது கலாச்சார நடத்தைகளின் அங்கம் எனவும் ஒலி அம்சங்கள் அமைப்பவர்களின் உணர்ச்சிகளை பொருத்து மாறுபடுகின்றன எனவும் தெரிவித்தனர். அதேபோல் மெட்டுகள் மாறினால் இசை என்ற ஒன்று உலகம் முழுவதும் பொதுவான ஒன்றாக திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Music Could Be a Universal Language: Science Explain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X