இரைச்சல் இல்லா இன்னிசை வழங்கும் புதிய இயர்போன்!

Posted By: Karthikeyan
இரைச்சல் இல்லா இன்னிசை வழங்கும் புதிய இயர்போன்!

இயர்போன்களை வாங்கும் போது அதன் அளவு மற்றும் அதன் திறன் ஆகியவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக இயர்போன் விலை குறைவாக, சிறியதாக, அடக்கமாக, எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக மற்றும் காதுகளில் மிகச் சரியாகப் பொருந்தும் விதத்தில் இருந்தால் அந்த ஹெட்போனை அனைவரும் விரும்பி வாங்குவர். அந்த வரிசையில் எம்இ எலக்ட்ரானிக்ஸ் தனது புதிய இயர்போனுடன் களம் இறங்குகிறது. இந்த புதிய இயர்போனின் பெயர் எம்இ எலக்ட்ரானிக்ஸ் எஸ்6 ஸ்போர்ட்-எப்ஐ ஆகும்.

இந்த எலக்ட்ரானிக்ஸ் இயர்போனின் சிறப்புகளைப் பார்க்கும் போது இது மாடுலர் கேபிள் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்த வயர் காதுகளில் மிகச் சரியாகப் பொருந்தும்.

இதன் பேஸ் இசை மிக சூப்பராக இருக்கிறது. அதுபோல் இதன் கேபிள்கள் டேங்கிள் மற்றும் இரைச்சல் இல்லாமல் இருக்கின்றன. அதோடு இந்த இயர்கப்புகள் வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சைலை உள்ளே விடுவதில்லை. மேலும் பலமாக காற்று அடித்தாலும் அந்த காற்றின் சத்தைத்தையும் இந்த இயர் ப்ளக்குகள் தடுத்து விடுகின்றன. இந்த இயர்போன் 2 நிற கலவையில் வருகிறது.

இந்த எலக்ட்ரானிக்ஸ் ஹெட்போனின் டிசைன் மிகவும் அபாரமாக உள்ளது. இது 2 நிறக்கலவையில் வருவதால் பார்ப்போரின் மனங்களைக் கொள்ளைடிக்கும் வகையில் உள்ளது. இதன் இயர் ப்ளக்குகள் ப்ளஷ்-இன்-இயர் கொண்டிருப்பதால் இவை காதுகளில் கனக்கச்சிதமாகப் பொருந்திவிடும்.

அதனால் வெளியிலிருந்து வரும் இரைச்சைலை இது உள்ளே விடுவதில்லை. மேலும் இந்த இயர் போனை அணிந்து ஹெட்மட் அல்லது தொப்பிகள் அணிந்தாலும் இது தொந்தரவாக இருக்காது.

இந்த எலக்ட்ரானிக் இயர்போனின் கேபிள் மாடுலர் டிசைனைக் கொண்டுள்ளது. அதனால் இதை பழைய இயர்போன்களைப் போலவும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த கேபிள் எளிதாக பழுதடையாது.

இந்த டிவைஸ் இசை கேட்கும் போது வெளிப்புற இரைச்சலைத் தடுத்து விடுவதால் இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க முடியும். அதுபோல் இதன் பேஸ் இசையும் மிக அபாரமாக இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் இயர்போன் 6 ஜோடி இயர் டிப்ஸ்களுடன் வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot