மோட்டோரோலா வழங்கும் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட்டுகள்

Posted By: Staff

மோட்டோரோலா வழங்கும் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட்டுகள்
கடந்த 2 ஆண்டுகளாக மோட்டோரோலா நிறுவனம் மின்னனு உற்பத்தியில் ஒரு சீரான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. குறிப்பாக மொபைல், டேப்லட் மற்றும் இசைப் பேழைகள் போன்ற துறைகளில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக மோட்டோரோலா எலைட் மற்றும் மோட்டோரோலா எலைட் பிலிப் என்ற 2 ப்ளூடூத் ஹெட்செட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மோட்டோரோலா எலைட் மற்றும் மோட்டோரோலா எலைட் பிலிப் ஆகிய இரண்டும் கட்டிங் எட்ஜ் நியர் பீல்ட் கம்யூனிகேசன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

இரண்டுமே எச்டி ஆடியோ ப்ளஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருப்பதால் இவை தரமான் துல்லியமான தெளிவான ஒலியை வழங்குகின்றன. இரண்டுமே 300 அடி ரோமிஹ் ரேஞ்சை கொண்டுள்ளன. அதுபோல் இரண்டுமே ப்ளூடூத் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.

மோட்டோரோலா எலைட் மற்றும் மோட்டோரோலா எலைட் பிலிப் இரண்டுமே இண்டக்ரேட்டட் மைமோட்டோஸ்பீக் கொண்டுள்ளன. அதன் மூலம் செய்திகளைக் கேட்க முடியும். அதே நேரத்தில் பேசும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்த முடியும்.

அதன் மூலம் போனைத் தொடாமலே நாம் செய்தகளை அனுப்ப முடியும். எலைட் பிலிப் ட்ரூ கம்போர்ட்டபுள் தொழில் நுட்பம் கொண்ட அருமையான 3 ஸ்டைல்களைக் கொண்டுள்ளது. மேலும் இதிலுள்ள ரேபிட் கனக்ட் தொழில் நுட்பம் இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

மோட்டோரோலா எலைட் பிலிப்பில் 6 மணி நேரம் தாங்கும் டாக்டைமும் அதே நேரத்தில் 12 நாள்கள் தாங்கும் பேட்டரி திறனும் உள்ளன. அதுபேல் மோட்டோரோலா எலைட் சில்வரில் 15 மணி நேர டாக்டைம் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த இரண்டு செட்டுகளுமே 1 அவுன்சுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ளன.

மோட்டோரோலா எலைட் சில்வரின் விலை ரூ.5900 ஆகும். அதே நேரத்தில் மோட்டோரோலா எலைட் பிலிப்பின் விலை ரூ.4000 ஆகும். இந்த இரண்டும் அக்டோபர் 24ல் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வந்துவிடும் என நம்பலாம். இது சாதனையைப் படைக்கும் எனவும் நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot