Home
Music

இதயத் துடிப்பை அறியும் மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு இசை கெட்ஜெட்

By Super
இதயத் துடிப்பை அறியும் மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு இசை கெட்ஜெட்
மோட்டோரோலா மோட்டோஎசிடிவி என்ற புதிய இசை பேழையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய இசைப் பேழைப் பார்ப்பதற்கும் ஐபாட் நானோவை ஒத்திருக்கிறது. இந்த ஆன்ட்ராய்டு இசை பேழை இசைக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் உத்திரவாதம் அளிக்கும் என நம்பலாம். இதன் எஸ்எப்700 மாடல் வயர் கொண்ட ஹெட்செட்டுடனும் எஸ்எப்500 மாடல் வயர்லஸ் ஹெட்செட் கொண்டும் வருகின்றன.

மோட்டோராலாவின் இந்த ஹெட்செட்டுகளில் நமது இதயத் துடிப்பை அறியும் சென்சார் உள்லது. மேலும் இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. மேலும் இது நமது உடலை நலமாக வைத்திருக்கு இந்த மோட்டோரோலா மோட்டோஎசிடிவி கண்டிப்பாக நமக்கு உதவும் என நம்பலாம்.

நமது உடலை நலமாக வைத்திருப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இந்த மோட்டோரோலா மோட்டோஎசிடிவி வைத்துள்ளது. இவற்றை மோட்டோரோலா மோட்டோஎசிடிவி.காம் மூலமாக தகவல்களை பெற முடியும்.

அதுபோல் மோட்டோரோலா மோட்டோஎசிடிவி 8ஜிபி மற்றும் 16ஜிபி அளவுகளில் சேமிப்பு வசதியை வழங்குகிறது. இதன் 1.6 இன்ச் வண்ண தொடுதிரை டிஸ்ப்ளே தானாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். மேலும் இது கோர்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பும் கொண்டுள்ளது.

அதனால் இதன் திரை கீறல் தடுப்பு வசதியும் கொண்டுள்ளது. மேலும் நீர் தடுப்பு வசதியும் கொண்டுள்ளது. அதனால் நாம் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் போது நமது வியர்வை இந்த இசைப் பேழையில் பட்டாலும் அதனால் அது பாதிப்பு அடையாது.

மோட்டோரோலா மோட்டோஎசிடிவியை எளிதாக நமது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனுடன் இணைக்க முடியும். அதனால் நாம் வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் அழைப்புகளையும், செய்திகளையும் எளிதாக பெற முடியும்.

மேலும் இது எப்எம் வசதியும் கொண்டிருப்பதால் நாம் எப்எம் கேட்டுக் கொண்டே நமது உடற்பயிற்சியை செய்யலாம். அதனால் உடற்பயிற்சியும் போர் அடிக்காது. அதுபோல் நாம் ஏராளமான பாடல்களையும் இதில் பதிவு செய்ய முடியும்.

இந்த மோட்டோரோலா மோட்டோஎசிடிவியின் பேட்டரி திறன் மிக அபாரமானது. அதாவது இதன் ஸ்டேன்பை நேரம் 2 வாரங்களாகும். வெளி இடங்களுக்குச் சென்றால் இது 5 மணி நேரம் தாங்கும். உள்ளேயே இருந்தால் 10 மணி நேரம் வரைத் தாங்கும் திறன் கொண்டது.

இந்த மோட்டோரோலா மோட்டோஎசிடிவியின் எடை 35 கிராம் மட்டுமே. இதன் மொத்த அளவு 46மிமீ X 46மிமீ X 9.6மிமீ ஆகும். இதன் 8ஜிபி மாடல் ரூ.12137க்கும் இதன் 16ஜிபி மாடல் ரூ.14574க்கும் கிடைக்கிறது. மேலும் இதன் வயர் ஹெட்செட்டுக்காக தனியாக ரூ.7263 கொடுக்க வேண்டும் அல்லது இதயத்துடிப்பா மானிட்டருக்காக ரூ.4825 கொடுக்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X