பட்ஜெட்டில் தெறி கிளப்பப்போகும் புது மொபைல்.. 12GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா.. கலக்கல் ஸ்பெக்ஸ்..
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் மோட்டோ ஜி 54 (Moto G54) என்ற புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் தேதியை மோட்டோரோலா இப்போது அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.
மோட்டோரோலா பிராண்ட் வெளிப்படுத்திய விவரங்களின் படி, மோட்டோரோலா ஜி 54 (Motorola G54) இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். இதே சாதனம், செப்டம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

பிளிப்கார்ட் போர்ட்டல் சாதனத்துடன் தொடர்புடைய மைக்ரோசைட்டை அதன் தளத்தில் லைவ் செய்துள்ளது. இது சில முக்கிய விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்துகிறது. Motorola G54 ஆனது டிமென்சிட்டி 7020 சிப்செட் (Dimensity 7020 SoC) மூலம் இயக்கப்படும் என்பதை பிளிப்கார்ட் (Flipkart) மைக்ரோசைட் (microsite) விபரம் வெளிப்படுத்துகிறது.
இந்த சாதனம் 12ஜிபி ரேம் (12GB RAM) மற்றும் 256ஜிபி (256GB storage) உடன் உள்ளடக்கிய ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்பதையும் மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரி மூலம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சாதனம் மோட்டோரோலாவின் இந்தியா இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது கூடுதல் விவரங்களை உறுதிப்படுத்துகிறது.
மோட்டோரோலா G54 ஆனது 6.5' இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டிருக்கும். இந்த சாதனம் 50MP + உடன் OIS ஆதரவைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறும்.
இந்த ஸ்மார்ட்போன் 30W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் (30W turbopower fast charging) ஆதரவை வழங்கும். இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு இணைப்புகளைப் பெறும் என்று நிறுவனம் கூறுகிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, G84 5G மற்றும் Moto G54 5G ஆகியவற்றின் விலை ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் வெளியாகியுள்ளது.
Moto G54 5G சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் ரூ.14,999 விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலையானது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்குப் பொருந்தும். இதன் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய 12ஜிபி ரேம் மாடல் ரூ.18,999 விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மறுபுறம், Moto G84 5G ஆனது 12ஜிபி ரேம் மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,999 விலை என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது.
மோட்டோ ஜி54 5ஜி : (Moto G54 5G) போனில் எதிர்பார்க்கப்படும் அம்சம்
இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் அளவு கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முழு எச்டி+ 2400 × 1080 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது ஆக்டா கோர் டிமென்சிட்டி 7020 சிப்செட் (Octa-core Dimensity 7020 SoC) உடன் வருகிறது. இது 8ஜிபி / 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OS உடன் இயங்கும். இது 50MP + 8MP கொண்ட டபுள் கேமரா அம்சத்துடன் வருகிறது. இது 16MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இது 6000mAh, 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி அட்மோஸ், மோட்டோ ஸ்பேஷியல் சவுண்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








