Home
Music

மான்ஸ்டர் + டீசல் கூட்டணியில் புதிய ஹெட்போன்!

By Karthikeyan
மான்ஸ்டர் + டீசல் கூட்டணியில் புதிய ஹெட்போன்!

சில நாட்களுக்கு முன்பு மான்ஸ்டர் நிறுவனம் தடகள வீரர்களுக்காக நீர் தடுப்பு வசதி கொண்ட புதிய இயர் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது. இப்போது மானஸ்டர் மற்றொரு புதிய ஸ்டைலான புதிய ஹெட்போனைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்போன் ஒரு தரமான சாதனமாக வருகிறது.

இந்த ஹெட்செட்டை தனியாக அல்லாமல் டீசல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஹெட்போனை மான்ஸ்டர் வெளியிடுகிறது. இந்த ஹெட்போனைப் பற்றிய தகவல்கள் இன்னும் அதிமாக வரவில்லை. ஆனால் வழக்கமாக மானஸ்டர் மிகவும் தரமான டிவைஸ்களையே களமிறக்கும். இப்போது டீசல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் இந்த புதிய ஹெட்போன் மிகவும் உயர்ந்த தரத்தில் வரும் என நம்பலாம்.

இந்த புதிய ஹெட்போன் ஒரு கன்வென்சனல் ஹெட்போன் டிசைனைக் கொண்டிருக்கும். இதன் வெளிப்புறம் மிக வித்தியாசமாகத் தெரிந்தாலும் இதன் உள்புறம் மற்ற கன்வென்சனல் ஹெட்போன்களைப் போலவே 2 இயர்கப்புகள் கொண்டு அது ஒரு ஹெட்பேன்டினால் இணைக்கப்பட்டுள்ளது. இது கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் வருகிறது. மேலும் வைர வடிவத்தில் இருக்கிறது. அதுபோல் வைர வடிவம் இல்லாத ஹெட்போனும் கிடைக்கும். இந்த ஹெட்போனில் டீசல் நிறுவனத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும்.

வெக்டர் வரிசையில் வரும் இந்த புதிய ஹெட்போனின் மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் அபாரமான இசை அனுபவம் ஆகும். இந்த ஹெட்போன் வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சல் மற்றும் சத்தங்களை தடுத்து விடுவதால் தடையில்லாத மற்றும் ரம்மியமான இசையை அனுபவிக்கலாம்.

மேலும் மான்ஸ்டர் மற்றும் டீசல் கூட்டணியில் உருவாகும் இந்த ஹெட்போன் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இசைத் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் என நம்பலாம். ஏனெனில் மக்கள் தரமான இசையை வழங்கக்கூடிய மற்றும் ஸ்டைலான ஹெட்போனை அதிக அளவில் விரும்புகின்றனர். அதை கண்டிப்பாக இந்த புதிய ஹெட்போன் நிறைவு செய்யும் என நம்பலாம்.

இந்த புதிய வெக்டர் வரிசை ஹெட்போன்கள் ரூ.7,500லிருந்து ஆரம்பமாகின்றன. இவற்றின் தரம் மற்றும் ஸ்டைலைப் பார்க்கும்போது இந்த விலை அதிகமாகத் தெரியாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X