Home
Music

விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக ஹெட்போன்!

By Karthikeyan
விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக ஹெட்போன்!

ஹெட்போன்களுக்கு சுற்றுப்புற சூழ்நிலைகளால் எப்போதுமே ஆபத்து உண்டு. மழையில் நனைந்து தங்களது ஹெட்செட் கெட்டுப்போனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய ஹெட்போன்களை வாங்குவோரும் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட பிரச்சினை இல்லாத புதிய ஹெட்போனை வழங்க இருக்கிறது மான்ஸ்டர்.

இந்த இயர்போன் தடகள மற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது அவர்கள் தடையில்லாத இசையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய இயர்போனின் பெயர் ஐஸ்போர்ட் லைவ்ஸ்ட்ராங் ஆகும்.

இந்த ஐஸ்போர்ட் லைவ்ஸ்ட்ராங் ஹெட்போனின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த ஹெட்போனைக் துடைத்து சுத்தம் செய்ய முடியும். இது இயர் க்ளிப் கொண்டிருப்பதால் காதுகளில் மிகச் சரியாகப் பொருந்திவடும். எவ்வளவு அசைந்தாலும் இந்த ஹெட்போன் கீழே விழாது. அதுபோல் சூப்பர்க்ளிப்பிற்குக் கீழே இந்த ஹெட்போன் கஸ்டம் பிட் ஆடியோ சீலைக் கொண்டிருக்கிறது. அதுபோல் சுழலும் இயர் பைப்புடன் பலவிதமான இயர் டிப்ஸ்களையும் இந்த இயர்போன் கொண்டுள்ளது.

இந்த ஐஸ்போர்ட் இயர்போன் மிகவும் அடக்கமான அதே நேரத்தில் அதைப் பயன்படுத்துவதற்கு மிக வசதியாக இருக்கும். இந்த ஹெட்போனில் அவ்வளவாக பிரச்சினைகள் இருக்காது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இது சரியான பொருத்தமாக இருக்கும்.

இந்த ஐஸ்போர்ட் ஹெட்போனின் ஆடியோவைப் பார்த்தால் அதுவும் தரமான வசதியுடன் வருகிறது. அதுபோல் இதன் ஆடியோவும் மிகத் தெளிவாக இருக்கும். இந்த ஹெட்போனின் பேஸ் இசை மிக அபாரமாக இருக்கும்.

மான்ஸ்டர் இந்த இயர்போனில் தனது புதுமையான கண்ட்ரோல் டாக்கை வைத்துள்ளது. இதன் மூலம் இதைப் பயன்படுத்துவோர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இயங்கும் இசை மற்றும் வீடியோ படங்களைக் கட்டுப்படுத்த முடியும். அதே போல் வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும். இந்த ஐஸ்போர்ட் ஹெட்போனின் விற்பனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் பவுண்ட்சனுக்கு நன்கொடையாக அளிக்கப்பட இருக்கிறது. இந்த பவுண்டேசன் லைவ்ஸ்ட்ராங் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதனால் இந்த ஹெட்போனை வாங்கினால் அது சேவையாகக்கூட இருக்கும்.

இந்த மான்ஸ்டர் ஐஸ்போர்ட் லைவ்ஸ்ட்ராங் ஹெட்போன் வரும் பிப்ரவரியில் இருந்து சந்தைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலமும் அதுபோல் ரேடியோஷேக் போன்ற சில்லறை வர்த்தகர்கள் மூலமும் வாங்க முடியும். இந்த ஹெட்போனின் விலை ரூ.9,500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X