சோனி ஹை-பை மியூசிக் சிஸ்டம்... பெயரில் மட்டும்!

By Super
|

சோனி ஹை-பை மியூசிக் சிஸ்டம்... பெயரில் மட்டும்!
சோனி நிறுவனம் தற்போது டபிள்யூஜி-எஸ்எல்கே20 என்ற மைக்ரோ ஹை-பை மியூசிக் சிஸ்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிஸ்டம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.20,000க்கு விற்கப்படுகிறது.

இந்த புதிய சிஸ்டம் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. இது கருப்பு நிறத்தில் பளபளக்கிறது. இது எல்சிடி பேனல் கொண்டதாக இருக்கிறது. இதன் 2 பக்கங்களிலும் 2 ஸ்பீக்கர்கள் தனித்தனியாக உள்ளன.

இந்த சோனி டபுள்யுஜி-எஸ்எல்கே20 சிஸ்டத்தின் சிறப்புகளைப் பார்த்தால் அது டபிள்யூஎம்ஏ, எம்பி3 மற்றும் ஏஏசி போன்ற ஆடியோ பார்மெட்டுகளையும் எம்பிஇஜி-4 மற்றும் டிஐவிஎக்ஸ் போன்ற வீடியோ பார்மெட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது.

ஜேபிஇஜி இமேஜ் ப்ளே பேக்கையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் பேஸ் பூஸ்டர், இக்யு பிரிசெட்ஸ் மற்றும் சரவுண்ட் சவுண்டையும் இந்த சிஸ்டம் வழங்குகிறது. ஸ்பீக்கரைப் பார்த்தால் அது 40எம்எம் ட்வீட்டர் யூனிட்டும் மற்றும் 130எம்எம் ஊபர் பில்ட்இன் மற்றும் 90 வாட்ஸ் எக்ஸ் 2 ஆர்எம்எஸ் பவர் அவுட்புட்டையும் இந்த சிஸ்டம் வழங்குகிறது.

இந்த சிஸ்டம் மிகவும் ஸ்டைலாகவும் அதே நேரத்தில் நமது அறையில் மிகவும் அழகாகவும் இருக்கும்.

இந்த சோனி டபுள்யுஜி-எஸ்எல்கே20 சிஸ்டத்தின் குறைபாடுகளைப் பார்த்தால் இதன் வீடியோ ப்ளேபேக் மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

குறைபாடுகள்:

இணைப்பு வசதியும் குறைவாக உள்ளது. இதன் யூசர் ப்ரண்ட்லி மிகவும் எளிமையாக இல்லை. இதன் எல்சிடி திரையும் மிகவும் சிறியதாக இருப்பதால் இதை தூரத்தில் இருந்து பார்க்க முடியாது. மேலும் விலைக்கேற்ற சிறப்புகள் இந்த சிஸ்டத்தில் இல்லை.

இந்த எஸ்எல்கே20டி சிஸ்டத்தின் ப்ளேபேக்கில் எச்டிஎம்ஐ அவுட் இல்லை. அதுபோல் இதில் 1080பி ப்ளேயர் அல்லது ப்ளூ-ரே வசதியும் இல்லை. மேலும் இதன் திரை சிறியதாக இருப்பதால் இதில் வீடியோ பார்ப்பதும் இதன் இன்டர்பேசை பயன்படுத்துவதும் மிகவும் கடினமாக இருக்கும்.

இவ்வளவு குறைகள் இருந்தாலும் இந்த இந்த சோனி டபுள்யுஜி-எஸ்எல்கே20 சிஸ்டத்தின் செயல்பாடு மட்டும் ஓரளவு நன்றாக இருக்கிறது. இதன் பேஸ் இசை மிக அருமையாக உள்ளது இதன் ப்ளஸ் பாயிண்ட். சோனியின் தயாரிப்பு என்றவுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த எதிர்பார்ப்புகளை இந்த மியூசிக் சிஸ்டம் முழுமையாக நிறைவேற்றவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X