ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

By Keerthi
|

இசை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் தான் இன்று.

மைக்கேலின் மரணத்தில் பல சர்ச்சைகள் இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள மைக்கேலின் ரசிகர்கள் இன்று பல இடங்களில் துக்கம் அனுசரித்து வருகிறார்கள்.

பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.

1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் பிறந்தவர் ஜாக்சன்.

இவரது குடும்பம் சாதாரணமானது. வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். 11 வயதிலேயே அவரது சகோரர்களுடன் இணைந்து "தி ஜாக்சன் 5" இசை நிகழ்ச்சி மற்றும் ஆல்பங்களை வெளியிட்டார். "ஐ வான்ட் யூ பேக்" எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது.

Click Here For Concept Gadgets Gallery

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

சகோதரர்களுடன் தொடர்ச்சியான "ஹிட்' ஆல்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார்.

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். அப்போதுதான் எம்.டி.வி., உருவாகியிருந்த நேரம்.

இந்த "டிவி' ஜாக்சனின் நிகழ்ச்சியால் பிரபலம் அடையத் தொடங்கியது. "பீட் இட்", "பில்லி ஜீன்" மற்றும் "திரில்லர்" ஆகிய இசை நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் "ஹிட்" நிகழ்ச்சிகள்.

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

1990களில் "பிளாக் ஆர் ஒயிட்' மற்றும் "ஸ்கிரீம்" ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன.

ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடினார்.

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.

உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என ஜாக்சனின் புகழ் உச்சிக்கு சென்றது.
அமெரிக்காவில் பாப், ராக் இசையில் 1980களில், மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார்.

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கியவர். ஆனால், அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து மரணத்தை தழுவினார் என்பது தான் சோகம்.

ஜாக்சன் இறந்த  தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

ஜாக்சன் இறந்த தினம் இன்று அவரை பற்றி வெளிவராத தகவல்கள்

எது எப்படியோ இசை மேதையின் நினைவு தினமான இன்று நாமும் மைக்கேலுக்கு மரியாதை செய்வோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X