தரமான இசை வழங்கும் புதிய மெரிடியன் சப்-ஊஃபர் ஸ்பீக்க்ர

Posted By: Staff

தரமான இசை வழங்கும் புதிய மெரிடியன் சப்-ஊஃபர் ஸ்பீக்க்ர
வீட்டின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஏராளமாக புதிய புதிய சாதனங்கள் வந்து கொண்ட இருக்கின்றன. அந்த பொருள்களின் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. குறிப்பாக வீட்டின் இசைப் பேழைகளுக்காக பல நிறுவனங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றன.

ஐபாட்கள் மற்றும் ஐபேடுகள் வந்த பிறகு அதை விட தரமான இசைப் பேழைகளுக்காக மக்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். குறிப்பாக ஹோம் தியேட்டர்கள் போன்றவற்றின் மீது மக்கள் மிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் ஒலிப் பெருக்கிகளும் துணை ஊபர்களும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வீட்டு ஒலிப் பெருக்கிகள் மற்றும் துணை ஊபர்கள் ஆகியவை புதியதாகவும் விலை குறைந்ததாகவும் இருப்பதால் அவற்றைப் பற்றிய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. அந்த வரிசையில் மெரிடியன் நிறுவனம் அத்தகைய ஒலிப் பெருக்கிகளையும் துணை ஊபர்களையும் வழங்குவதில் தலை சிறந்து இருக்கிறது.

தற்போது மெரிடியன் நிறுவனம் டிஎஸ்டபுள்யு துணை ஊபரை மெடிரியன் டிஜிட்டல் தியேட்டர் மற்றும் இசைக்காக டிஎஸ்பி 3300 மற்றும் மற்ற மெரிடியன் டிஎஸ்பி ஒலிப் பெருக்கிகளுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது. எனவே இதைப் பயன்படுத்துவோர் மெரிடியனின் ஸ்பீக்கர் லிங்க் வசதியை அனுபவிக்க முடியும்.

மெரிடியனின் டிஎஸ்பி அந்த நிறுவனத்தின் முதல் டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் துணை ஊபர் ஆகும். இது மிக ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கிறது. இது மிக அகலமாக இருக்கிறது. குறிப்பாக இதில் 12" டிரைவர் இருக்கிறது. குறிப்பாக இந்த டிவைசின் வளைவுகள் மிக முக்கிய அம்சமாக இருக்கின்றன. அதனால் பார்ப்பதற்கும் மிக கவர்ச்சியாக இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல் இதில் மெரிடியனின் ஸ்பீக்கர் லிங் உள்ளதால் இதை மெரிடியனின் மற்ற டிவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். அதே நேரத்தில் ஆடியோ கோர் 200, சரவுண்ட கண்ட்ரோலர் மற்றும் பிற மெரிடியனின் டிஎஸ்பி ஒலிப்பெருக்கிகளோடும் இணைக்க முடியும்.

டிஎஸ்டபுள்யு டிஎஸ்பி ஒலிப் பெருக்கிகளோடு சரியாக இணைந்த போகும் அளவிற்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் படம் பார்ப்பதும் மற்றும் பாடல் கேட்பதும் அற்புதமான அனுபவத்தைத் தரும். டிஎஸ்டபுள்யுவில் நெகிழ்வுதன்மை மிக அதிகம். இந்த துணை ஊபர்கள் மெரிடியனின் எல்லா டிஎஸ்பி இசைப் பேழைகளோடும் இணைக்க முடியும். மேலும் இதன் இசையும் மிக அட்டகாசமாக இருக்கும். இந்த மெரிடியனின் டிஎஸ்டபுள்யு துணை ஊபர் ரூ.2 லட்சம் விலையில் கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot