ரூ.1,299 விலையில் புதிய மெர்குரி ஹோம் தியேட்டர்கள்

Posted By: Staff

ரூ.1,299 விலையில் புதிய மெர்குரி ஹோம் தியேட்டர்கள்
இசை பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மெர்குரி ஹோம் தியேட்டர்களை மீண்டும் இந்தியாவில் களமிறக்குகிறது கோபியன் நிறுவனம்.

மெர்குரி எச்டி-7800 ஹோம் தியேட்டர் ஒலிபெருக்கிகளோடு சப்-ஊபர் சீரிஸ் எஸ்டபிள்யூ-2600, எஸ்டபிள்யூ-2850 மற்றும் எஸ்டபிள்யூ-5200 யூ ஆகிய மூன்று ஹோம் தியேட்டர்களை அறிமுகப்படுத்துகிறது.

மெர்குரிக்கு இந்தியாவில் அதிக மவுசு இருப்பதால் கோபியன் நிறுவனம் மெர்குரியை ஹோம் தியேட்டர்களை மீண்டும் களமிறக்குகிறது.

இந்த புதிய மெர்குரி ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-ஊபர் மற்றும் ஒலிபெருக்கிகள் எஸ்டி மற்றும் யுஎஸ்பி டிரைவ்களுக்கான இன்பில்ட் ஸ்லாட்டுகளைக் கொண்டிருக்கும். எனவே இந்த எஸ்டி மற்றும் யுஎஸ்பி டிரைவ்கள் வழியாக நேரடியாக மியூசிக் ட்ராக்குகளை இயக்க முடியும்.

இதற்காக தனியாக வேறு கணனியோ அல்லது வேறு ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டுவேரோ தேவையில்லை. ஆனால் இந்த வசதி எஸ்டபிள்யூ-2600 மாடலில் கிடையாது.

இந்த புதிய மெர்குரி சிஸ்ட்ம் தெளிவான ஒலி அமைப்புக்காக 2.5 இன்ச் சாட்டிலைட் மற்றும் மாக்னட் மூலம் இயங்கும் துணை ஊபர்களைக் கொண்டுள்ளது. எஸ்டபுள்யு சீரிஸ் மரப்பலகைகளால் செய்யப்பட்டவை. இதனால் இவை வைப்ரேஷன்கள் போன்றவற்றால் பாதிப்படைவதில்லை.

மேலும் இது சிறப்பாக செயலாற்ற முடியும். குறிப்பாக இந்த புதிய மெர்குரி சிஸ்டம் இசை, விளையாட்டுகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றுக்காகவே உருவாக்கப்படுகின்றன. இதன் டூவல் கோன் இன்டக்ரேட்டட் எல்லாவிதமான மீயூசிக் பார்மட்டுகளையும் இயக்கி மிகச்சரியான ஒலி அமைப்பைக் கொடுக்கக்கூடியவை.

இந்த புதிய மெர்குரி சிஸ்டம் கருப்பு வெள்ளி டிஸைனில் மிக ஸ்டைலாக வரவிருக்கிறது. இதன் மாக்னடிக் சாட்டிலைட்டுகளும் அதிக இடம் தேவைப்படுவதில்லை. மேலும் இந்த சிஸ்டத்தில் ஆப்டிமல் யூட்டிலைசேஷனுக்காக போதிய இடமும் உள்ளது.

மேலும் இதன் ஒலிபெருக்கிகளை மானிட்டர்கள் மற்றும் டிவிக்களின் இருபுறமும் வைக்கலாம். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும் இதன் ஒலிபெருக்கிகள் எப்எம் வசதியும் கொண்டிருக்கின்றன.

கோபியனின் இந்தியாவிற்கான மேலாளர் கூறும் போது, இந்த புதிய மெர்குரி ஹோம் தியேட்டர்கள் எல்லா விதமான வசதிகளையும் கொண்டிருப்பதால் கணனிகளை நம்பியிருக்கத் தேவையில்லை என்று கூறினார்.

புதிய மெர்குரி ஹோம் தியேட்டர்களின் விலை ரூ. 1299லிருந்த ரூ. 3599க்குள் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்