விலை உயர்ந்த மெக்கின்டோசின் புதிய ஹோம் தியேட்டர்

By Super
|
விலை உயர்ந்த மெக்கின்டோசின் புதிய ஹோம் தியேட்டர்
இசை வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறது. எப்போது கிராம போன்கள் வந்தனவோ அப்போது இருந்தே இசையும் படிப்படியாக மாற ஆரம்பித்து விட்டன. குறிப்பாக கிராம போன்கள்தான் பலவிதமான புதிய தொழில் நுட்பம் கொண்ட இசைக் கருவிகள் தோன்ற காரணம் என்று சொல்லலாம்.

குறிப்பாக ரிக்கார்ட் ப்ளேயர்கள், ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர்கள் மற்றும் வாக்மேன்கள் போன்றவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது கிராமபோன் என்றால் மிகையாகாது. அடுத்ததாக எம்பி3 பிளேயர்கள் ஒரு புதிய இசை வடிவத்தைத் தந்தன. அதுபோல் யுஎஸ்பி மியூசிக் ஸ்டிக்குகள் மற்றும் ஆப்பிள் ஐபாட்கள் போன்றவை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இசையை கொண்டு சென்றிருக்கின்றன.

இவ்வாறு தனியாக இசை கேட்கும் தன்மை மாறி வீடுகளிலேயே கார்பரேட் இசையைக் கேட்கும் பழக்கம் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தொடங்கியது. அந்த வீடுகளுக்கு ஹோம் தியேட்டர்களை வழங்கியது மெக்கின்டோஷ் நிறுவனமாகும். அந்த நிறுவனம் இன்னும் புதுமையான சிந்தைனையுடன் எளிமையான ஹோம் தியேட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

மெக்இன்டோஷ் நிறுவனம் தற்போது தனது 2012 ஆம் ஆண்டின் படைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது 3 ஸ்பீக்கர்களுடன் குறைந்த விலையில் வருகிறது. மெக்இண்டோஷின் தலைவர் சார்லி ராண்டல் கூறும்போது மெக்இண்டோஷின் பிரிமியம் ஹோம் தியேட்டர்கள் மார்க்கெட்டில் ஒப்பிடுகையில்,குறைவான விலையில் அதே நேரத்தில் மிகத் தரத்துடன் இருக்கும் என்று கூறுகிறார்.

மெக்கின்டோஷ் ஹோம் தியேட்டர் ப்ரீம்ப் அல்லது ப்ராசஸருடன் முதல் 3டி ரே ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இந்த ப்ரீம்ப் அல்லது ப்ராசஸர் ஏர்ப்ளேயுடன் கூடிய மெக்ன்டோஷின் முதல் படைப்பாக இருக்கும். அதுபோல் 3டி ப்ளூ-ரே ப்ளேயர் மற்றும் ப்ரீம் அல்லது ப்ராசஸர் டிஎல்என்எ சான்று பெற்ற மெக்இன்டோஷின் முதல் தயாரிப்பாக இருக்கும். அதுபோல் ஏர்ப்ளேயுடன் கூடிய ஒரு ஸ்பீக்கர் லேப்டாப் ப்ரீம்ப் அல்லது ப்ராசஸருக்கு முன்பாகவே வரும்.

புதிய கம்போனன்டுகளைப் பார்த்தால் அது ப்ளூ-ரே அல்லது டவிடி அல்லது எஸ்எசிடி ப்ளேயர், 7X200 வாட் ஆம்ப்ளிபயர் மற்றும் ப்ரீம்ப் அல்லது ப்ராசஸர் ஆகும். இவ்வளவு பொருள்களுடன் கூடிய ஒரு புதிய மெக்கின்டோஷின் ஹோம் தியேட்டரை வாங்க சில லட்சம் பணம்தான் தேவைப்படும். இந்த புதிய கம்போனன்டுகள் 2012 ஜனவரியில் சந்தைக்கு வரும். மேலும் அதன் ஸ்பீக்கர்கள் பிப்ரவரி மாதம் வரும்.

தோராயமாக மெக்கின்டோஷ் ஸ்பீக்கர்களின் விலை ரூ.5,00,000 மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X