துல்லிய இசையை வழங்கும் புதிய வயர்லஸ் ஹெட்போன்!

Posted By: Karthikeyan
துல்லிய இசையை வழங்கும் புதிய வயர்லஸ் ஹெட்போன்!

லாஜிடெக்கின் இசைப் பேழைகள் அனைத்துமே உயர்ந்த தரத்தில் இருக்கும். அதுபோல தனது இசைப் பேழைகளுக்கு கணிசமான ரசிகர் பட்டாளத்தையும் லாஜிடெக் வைத்திருக்கிறது. தனது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த சமீபத்தில் யுஇ9000 என்ற வயர்லஸ் ஹெட்போனை லாஜிடெக் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த யுஇ9000 ஹெட்போனைப் பற்றிய தொழில் நுட்ப தகவல்கள் இன்னும் விரிவாக வரவில்லை. ஆனால் இந்த ஹெட்போனைப் பற்றிய வரைபடம் வந்திருக்கிறது. அதன்படி இந்த ஹெட்போன் முழு அளவிலான காதுகளை முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

இந்த ஹெட்போன் வயர்லஸ் தொழில் நுட்பத்தில் வருவதால் இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. மேலும் பயணத்தின் போது இதை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் இந்த ஹெட்போன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹெட்போனை மிக எளிதாக பயன்படுத்த முடியும். அதுபோல் இதில் நீண்ட நேரம் பாடல் கேட்டாலும் இது காதுகளுக்கு தொந்தரவு அளிக்காது. அதுபோல் இந்த ஹெட்போனில் இரைச்சல் இருக்காது. மேலும் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களும் இந்த ஹெட்போனுக்குள் நுழைய இடமில்லை.

இந்த வயர்லஸ் ஹெட்போன் மிகத் தெளிவான மற்றும் துல்லியமான இசையை வழங்கும். இந்த ஹெட்போன் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இதன் விலை பற்றி அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot