Home
Music

ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் லாஜிடெக் டேப்லெட் ஸ்பீக்கர்

By Super
ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் லாஜிடெக் டேப்லெட் ஸ்பீக்கர்
தமது ஐபேட் மற்றும் டேப்லட்டுகளில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு ஹோம் தியேட்டர் அனுபவம் கிடைத்தால் மிக மகிழ்ச்சி அடைவார்கள். அதை உணர்ந்த லாஜிடெக் நிறுவனம் அத்தகைய ஹோம் தியேட்டர்அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய புதிய டேப்லட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது தரமான இசையைக் கொடுத்தாலும் உருவத்தில் பெரியதாக இல்லை.

இந்த அடக்கமான இசைப் பேழை 3.5 எம்எம் ஆடியோ இணைப்பைக் கொண்டிருப்பதால் மிக எளிதாக இதை டேப்லட்டோடு இணைத்து விடலாம். மேலும் இதன் யுஎஸ்பி போர்ட் மூலம் இதை ஜார்ஜ் செய்யலாம். அதனால் ஐபேடை லேப்டேப்பில் இணைத்திருக்கும் போது இந்த ஸ்பீக்கரை ஜார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதன் சுருள் கொண்ட க்ளிப் மூலம் டேப்லட்டின் பின்புறத்தின் மேல் பொருத்த்க கொள்ளலாம். ஸ்பிக்கர்களை டிவைசுக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் இதிலிருந்து வரும் ஸ்டீரியோ இசை தனியாகப் பிரிந்து வந்து நமது மனதைக் கொள்ளையடித்து விடும்.

லாஜிடெக் டேப்லட் ஸ்பீக்கரை ஏற்கெனவே டேப்லட்டில் மேலும் கீழும் பொருத்தி வைத்து பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு சரியாக இந்த ஸ்பீக்கரைப் பொருத்திவிட்டால் நாம் வீடியோ பார்க்கும்போது இது தரமான இசையைக் கொடுக்கும்.

ஸ்பீக்கரை டேப்லட்டின் மேல் பகுதியில் வைத்தால் டேப்லட்டை படுக்க வைக்க வேண்டும். ஆனால் அது சரியாக வராது. அதனால் டேப்லட்டை நமது கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் டேப்லட்டின் கீழ் பகுதியில் இந்த ஸ்பீக்கரை வைத்தால் அது மிகுந்த வசதியாக இருக்கும். அதே நேரத்தில் டேப்லட்டை நமது கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

லாஜிடெக் ஸ்பீக்கரைப் பயன்படுத்துவதில் ஒரு சிறிய பிரச்சினைதான் உள்ளது. அதாவது லாஜிடெக் ஸ்பீக்கரை டேப்லட்டின் மேல் பகுதியில் வைக்கும் போது அதன் மேல் பகுதியில் இருக்கும் ஆன் ஆப் பட்டனும் மேல் பகுதியில் இருக்கும்.

ஆனால் ஸ்பீக்கரை டேப்லட்டின் கீழ்பகுதியில் வைத்தால் ஸ்பீக்கரின் மேல் பகுதியில் இருக்கும் ஆன் ஆப் பட்டனை டேப்லட் தொடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஸ்பீக்கர் ஆப் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஸ்பீக்கரை சரியான் இடத்தில் பொருத்த வேண்டும்.

இந்த லாஜிடெக் ஸ்பீக்கரைப் பற்றி வேறு எந்தவித புகாரும் இல்லை. இதன் விலையைப் பார்த்தால் அது 50 ஆஸ்திரேலிய டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.2437 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X