ரூ.2,300ல் டேப்லெட் ஸ்பீக்கர் : லாஜிடெக் அறிமுகப்படுத்துகிறது

By Super
|
ரூ.2,300ல் டேப்லெட் ஸ்பீக்கர் : லாஜிடெக் அறிமுகப்படுத்துகிறது
ரூ.2,300 விலையில் டேப்லெட்டுகளுக்கான குட்டி ஸ்பீக்கரை லாஜிடெக் நிறுவனம் விரைவில் அறிமுகப்படு்த்துகிறது.

கம்ப்யூட்டர்களுக்கான ஸ்பீக்கர் தயாரிப்பில் லாஜிடெக் பிரபலமாக திகழ்கிறது. இந்த நிலையில், டேப்லெட் என்று கூறப்படும் கைக்கு அடக்கமான கம்ப்யூட்டர்களுக்கான ஸ்பீக்கரை லாஜிடெக் முதன்முறையாக வடிவமைத்துள்ளது.

பொதுவாக டேப்லெட்டில் உள்ள ஸ்பீக்கர்கள் குறைந்த வால்யூமை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், லாஜிடெக் வடிவமைத்துள்ள இந்த ஸ்பீக்கரை டேப்லெட்டுடன் இணைத்துக்கொண்டால் போதும்.

இந்த ஸ்பீக்கரில் பொருத்தப்பட்டுள்ள விஷேச ஆம்ப்ளிபயர் மூலம் ஒரு ஹோம தியேட்டரில் இசையை கேட்கும் அனுபவத்தையும், அதிக வால்யூமையும் பெற முடியும்.

ஆப்பிள் ஐபேட் டேப்லெட்டுக்கு ஏற்றவகையில் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்ட எந்தவொரு டேப்லெட்டிலும் இந்த ஸ்பீக்கரை பொருத்திக்கொள்ள முடியும்.

இந்த ஸ்பீக்கர்களை டேப்லெட்டின் பின்பக்கத்தில் பொருத்திக்கொள்ளும் வகையில் கிளிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கூடுதலாக ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருப்பது வெளியே தெரியாத வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

டேப்லெட்டுடன் ஸ்பீக்கரை எடுத்துச்செல்வதும், கையாள்வதும் மிக எளிதாக இருக்கும். டேப்லெட்டுடன் இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை இணைத்து சினிமா மற்றும் பாடல்களின் ஒலியை கேட்கும்போது புதிய அனுபவத்தை பெறமுடியும்.

ஆனால், இதில் சில அசகவுரியங்களும் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த ஸ்பீக்கரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், ஒயர்கள் மூலம் இணைக்க வேண்டியிருப்பது சிறிது அசகவுரியத்தை தரும்.

இந்த ஸ்பீக்கரை லாஜிடெக் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஆர்டர் செய்து ஆன்லைனில் வாங்கலாம். இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த ஸ்பீக்கர் ரூ.2,300 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X