ஐபேட்,ஐபோனுக்கான லாஜிடெக் ஸ்பீக்கர் சிஸ்டம்!

Posted By: Staff
ஐபேட்,ஐபோனுக்கான லாஜிடெக் ஸ்பீக்கர் சிஸ்டம்!

லாஜிடெக் வழங்கிய எஸ்715ஐ என்ற புதிய ஐபோடு மற்றும் ஐபோன் ஸ்பீக்கருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் வருகின்றன. இதன் விலை குறைவாக இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக உள்ளது. இந்த எஸ்715ஐ ஸ்பீக்கர் 8 டிரைவர்களைக் கொண்டிருப்பதால் இது அற்புதமான ஒலி அமைப்பை வழங்குகிறது.

லாஜிடெக் எஸ்715ஐ ஸ்பீக்கர் தோற்றத்திலும் அடக்கமாக இருக்கிறது. இது  பூம் பாக்ஸ் அளவை ஒத்திருக்கிறது. இது ஐபேட் டோக் உறையுடன் வருகிறது. இதன் ஒலி கட்டுப்பட்டு பட்டன்கள் இதன் முன்புறம் வருகின்றன. இதன் இரு பக்கங்களிலும் 2 இன்ச் ரேடியேட்டர் ஊபர்கள் வருகின்றன. அதனால் இதன் இசை நிச்சயம் பரவசப்படுத்தும்.

இதன் 6 டிரைவர்களில் 4 ட்ரைவர்களை மட்டுமே நேரடியாக மின் இணைப்பில் இணைக்க முடியும். அதாவது இதன் இடையில் 3 இன்ச் ஜோடி மற்றும் அரை இன்ச் ட்வீட்டர்கள் உள்ளன. மற்ற 2 இன்ச் ட்ரைவர்கள் ஒலியை உருவாக்குகின்றன. லாஜிடெக் இந்த டிவைசில் 30 பின் கனெக்டரை வழங்குவதால் இதில், அனைத்து மாடல் ஐபோன் மற்றும் ஐபேடுகளை மிக எளிதாக இணைக்க முடியும்.

மார்க்கெட் நிபுணர்களின் கூற்றுப்படி இந்த ஸ்பீக்கர்தான் தலைசிறந்த ஐபேட்-ஐபோன் ஸ்பீக்கர் என்று கருதப்படுகிறது. இதன் விலை ரூ.8,000 மட்டுமே. இந்த ஸ்பீக்கரில் இசைக் கருவிகளின் ஒலிகள் மிகப் பிரமாதமாக கேட்கும்.

இந்த லாஜிடெக் ஸ்பீக்கரின் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரி 8 மணி நேரம் பேக்கப்பை கொண்டிருக்கிறது. உண்மையாகவே இந்த ஸ்பீக்கர் ஐபேட்-ஐபோனுக்கான ஒரு அருமையான அக்சஸரி ஆகும்.

இந்த ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் இதன் குறைந்த விலை, 8 ட்ரைவர்கள், அட்டகாசமான டிசைன் மற்றும் எளிதில் எடுத்துச் செல்லும் தன்மை ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் குறைபாடு மிகவும் சிறியதாகும். அதாவது இதில் கடிகாரம், இக்யு, மற்றும் எப்எம் ஆகியவை கிடையாது. ஆனாலும் இதன் அபாரமான இசை இந்த குறைகளை நிவர்த்தி செய்து விடும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot