லாஜிடெக்கின் வயர்லெஸ் பூம்பாக்ஸ் மற்றும் ஹெட்போன்

Posted By: Staff

லாஜிடெக்கின் வயர்லெஸ் பூம்பாக்ஸ் மற்றும் ஹெட்போன்
லாஜிடெக் நிறுவனம் கணினிகளுக்கும், டேப்லட்டுகளுக்கும் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கும் இசைக்கான டிஜிட்டல் அக்சஸரிகளை வழங்குகிறது. லாஜிடெக் நிறுவனம் வழங்கும் இந்த இசைப் பேழைகளில் இசை கேட்பது நமக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். அந்த வகையில் தடையில்லாமல் இசை வழங்கும் லாஜிடெக் வயர்லஸ் ஹெட்போன் மற்றும் வயர்லஸ் பூம்பாக்ஸ் போன்றவற்றை களமிறக்க இருக்கிறது.

இந்த புதிய வயர்லஸ் ஹெட்போன் மற்றும் பூம்பாக்ஸ் இசை பேழை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம். அடிப்படையில் லாஜிடெக் வயர்லஸ் பூம்பாக்ஸ் மற்ற எந்த ஒரு டிவைசோடும் இணையும் தன்மை கொண்ட ஒரு வயர்லஸ் ஆடியோ ஸ்பீக்கர் ஆகும். இந்த பூம்பாக்ஸை நமது மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் மற்றும் டாப்லட்டுகளோடு எளிதில் இணைக்க முடியும்.

இணைத்த பின் நமது டேப்லட் அல்லது ஸ்மார்ட்போன் ரிமோட் கன்ட்ரோல் போல செயல்படும். இந்த பூம்பாக்ஸில் உள்ள பேட்டரி 6 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இந்த பூம்பாக்ஸை நாம் பொது கூட்டங்களிலும், விருந்துகளிலும் பயன்படுத்தலாம். நமது ஸ்மார்ட்போன் மூலம் இந்த பூம்பாக்ஸை கட்டுப்படுத்தி இசையை தவழ விடலாம். அதனால் விருந்துகளும் கூட்டங்களும் கலகலப்பாக இருக்கும்.

லாஜிடெக் வயர்லஸ் ஹெட்போனை எடுத்துக் கொண்டால் இதன் பேட்டரி 6 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இதை எந்தவொரு மியூசிக் சாதனத்திலும் இணைக்க வயர் தேவை இல்லை. ஐபேட், ஐபோன் மற்றும் ஐபோட் போன்ற பேழைகளில் இதன் மூலம் இசை கேட்பது மிக சிறப்பாக இருக்கும். மேலும் இது இரைச்சலையும் போக்கும். மேலும் இந்த இரண்டும் மிக விரைவில் சந்தைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வந்த தகவலின் படி பூம்பாக்ஸ் ரூ.8,600க்கு வயர்லஸ் ஹெட்போன் ரூ.3,350க்கும் விற்கப்படும் என்று நம்பலாம். ஆனால் இப்போது இவை இரண்டும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot