Home
Music

ரூ.92,000 விலையில் வரும் புதிய லூவி ஹோம் தியேட்டர்

By Super
ரூ.92,000 விலையில் வரும் புதிய லூவி ஹோம் தியேட்டர்
லூவி நிறுவனம் சவுண்ட்விஷன் என்ற புதிய ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது 7.5 தொடுதிரை டிஸ்ப்ளேயுடன் மொத்த ஆடியோ சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. இதை வாங்கிவிட்டால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடலாம் ஏனெனில் இது அனைத்து வசதிகளையும் குறிப்பாக நெட்வொர்க் வசதிகளையும் வழங்குகிறது.

இந்த சவுண்ட்விஷன் 6 இண்பில்ட் ஒலிபெருக்கிகளையும் அவற்றில் 2ஐ துணை ஊபர்களாகவும் வழங்குகிறது. முகப்பில் சிடி ப்ளேயரையும் மற்றும் ஐபோட் மற்றும் ஐபோன் டோக்குகளையும் கொண்டுள்ளது. மேலும் இதன் இண்டக்ரேட்டட் எப்எப் ரேடியோவும் உள்ளது.

மேலும் இந்த டிவைசில் இன்டர்னட் மூலமாக எல்லா மீயூசிக் பைல்களையும் இண்டர்நெட் ரேடியோவையும் இயக்க முடியும். அதற்கான வைபை வசதியும் எர்த்நெட் தொடர்பும் உள்ளன. இதன் ப்ளூடூத் மூலம் மீயுசிக் பைல்களை இந்த லூவி சவுண்ட் விஷனுக்கு அனுப்ப முடியும்.

இதன் தொடுதிரை டிஸ்ப்ளே மூலம் ஆல்பம் மற்றும் ப்ளே லிஸ்டை ஸ்க்ரோல் செய்ய முடியும். இதன் யூசர் இண்டர்பேஸ் மிக அழகாக உள்ளன. இதில் படங்களும் மிக தெளிவாக உள்ளன. இது அலுமினிய தகட்டால் செய்யப்பட்டுள்ளதால் இது பாப்ப்பதற்கும் மிக பளபளப்பாக உள்ளது. இதன் பட்டனகளும் மிக சென்சிட்டிவாக உள்ளன.

இந்த சவுண்ட்விஷன் இசைக்கான அனைத்து அம்சங்களையும் தன்னில் உள்ளடக்கி இருக்கின்றது. தனது தொழில் நுட்பத்தின் மூலம் தெளிவான இசையை இது கொடுக்கிறது. இதன் இன்டக்ரேட்டட் மீடியா ப்ளேயர் பலதரப்பட்ட ஈக்வலைசர்களையும் ஒலி அமைப்பையும் வழங்குகிறது. மேலும் இது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்க ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த லூவி சவுன்விஷனின் விலை ரூ.92,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் வரும் அக்டோபரில் சந்தைக்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X