இனிமையான இசைக்கு லூவி ஏர் ஒலிபெருக்கிகள்

Posted By: Staff

இனிமையான இசைக்கு லூவி ஏர் ஒலிபெருக்கிகள்
லூவி நிறுவனம் புதிய ஒலிபெருக்கியை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன் லூவி ஒரு மீயூசிக் ப்ளேயிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சவுன்ட் விஷன் சிஸ்டத்தின் செயல்பாடும் அதன் ஸ்டைலும் பலரைக் கவர்ந்தன. அதைத் தொடரந்து இந்த ஏர் ஒலிப்பெருக்கியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த லூவி ஏர் ஒலிபெருக்கி ஐபோன், ஐபோட் மற்றும் ஐபேடுகளிலுள்ள மீயூசிக் பைல்களை வயர்லஸ் மூலம் இயக்கும் சக்தி வாய்ந்தது. ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில் நுட்பம் ஐஒஎஸ் டிவைஸ்களிலிருந்து இந்த ஒலிப்பெருக்கியை இயக்குகிறது. இந்த ஒலிப்பெருக்கி இரண்டு துணை ஊபர்களையும் பெற்று உள்ளது. மேலும் இது 2 ட்வீட்டர்கள் மற்றும் 2 மிட் ரேன்ச் ஒலிப்பெருக்கி செட்டுகளையும் கொண்டுள்ளது.

இதன் மொத்த மின்திறன் 80 வாட்ஸ் ஆகும். எல்என், டபுள்யுஎல்எஎன் மூலமாக ஏர்ப்ளே மற்ற டிவைஸ்களுக்கு ட்ரான்ஸ்மிஷன் செய்ய முடியும். குறிப்பாக சுவிட்ச்சைப் போட்டவுடன் இது பாடும் சக்தி கொண்டது. மேலும் இது யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளதால் யுஎஸ்பி தொடர்பு கொண்ட பென்ட்ரைவ்கள் மற்றும் ஹார்ட் ட்ரைவ்களை இது சப்போர்ட் செய்யும்.

ஐஒஎஸ் டிவைஸ்களில் உள்ள பைல்களை ஏர்ப்ளே ட்வைஸ் உதவியோடு இயக்கும். இப்போது ஏர்ப்ளே டிவைஸ்கள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றள்ளன.

லூவி ஏர் ஒலிப்பெருக்கிகள் ஆப்பிள் டிவைஸ்களோடு இணைந்து மக்களக்கு நல்ல பயனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இது பார்ப்பதற்கு அழகாக அதாவது அலுமினியம் கருப்பு அல்லது அலுமினியம் சில்வர் நிறத்தில் வருகிறது.

லூவி ஏர் ஒலிப்பெருக்கி இந்த அக்டோபர் மாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் விலை ரூ.53,572 ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது விலை அதிகமாக தெரிந்தாலும் இதன் செயல்பாடு மிக அதிகமாக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்