ஐபோட், ஐபோனுக்கான புதிய கார் ரோடியோ கிட்: லிவியோ அறிமுகம்

Posted By: Staff

ஐபோட், ஐபோனுக்கான புதிய கார் ரோடியோ கிட்: லிவியோ அறிமுகம்
கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்துள்ளன. அடக்கமான மீடியா ப்ளேயர், வாக்மேன்கள், அடுத்ததாக அதை வாகனங்களில் கொண்டு செல்லும் வசதி என நாம் எண்ணிக் கொண்டே செல்லலாம். வாகனங்களில் உள்ள யுஎஸ்பி மற்றும் சிடி ட்ரைவ்களுடன் ஒருங்கிணைந்த மீடியா ப்ளேயர்கள் உலக அளவில் பொழுதுபோக்கின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது.

அதன் தொடர்ச்சியாக லிவிசோ ரேடியோ புதிதாக ஐபோட் மற்றும் ஐபோன் மூலம் இயக்கக்கூடிய இன்பில்ட் மீடியோ ப்ளேயருடன் கார் இன்டர்நெட் ரேடியோ ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டிவைஸ் ப்ளூடூத் கொண்டு ஐபோட் மற்றும் ஐபோன் போன்ற வெளிப்புற ப்ளேயர்களை எளிதாக சின்க்ரோனைஸ் செய்யும் வசதி கொண்டது.

மேலும், இது உலகிலுள்ள 45,000 எப்எம் ரேடியோ ஸ்டேஷன்களின் ஒலிபரப்பை பெறும் சக்தி வாய்ந்த இண்டர்நெட் ரேடியோ அப்ளிகேஷன் கொண்டதாகும். மேலும் இதன் ப்ளூடூத் கார் ஸ்டிரீயோக்கள் மூலம் இயங்கக் கூடியது. மேலும் வாகனத்தில் இது ஹேண்ட்ஸ ப்ரீ வீடியோ காலிங் வசதியையும் வழங்குகிறது. இதை யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்ய முடியும். அதற்கான் மாத கட்டணமும் இதற்கு இல்லை.

இந்த லிவியோ ரேடியோ லஸ் வேகாஸில் நடந்த அகில உலக நுகர்வோர் எலக்ட்ரானிக் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன்கள் மூலம் எக்ஸ்டர்னல் ப்ளூடூத் இன்டக்ரேட்டட் ஹார்வேருடன் தொடர்பு படுத்த முடியும்.

லிவியோ ரேடியோவின் ஸ்தாபகரும் மற்றும் தலைமை அதிகாரியுமான திரு ஜாக் சிகல் இந்த புதிய படைப்பைப் பற்றி கூறும் போது இந்த லிவியோ ரேடியோ உலகிலுள்ள அத்தனை ரேடியோ ஸ்டேஷன்களையும் ஒலிபரப்பும் தன்மை கொண்டவை. மேலும் இவை எல்லோருடைய கார்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று கூறுகிறார்.

இந்த புதிய லிவியோ ரேடியோ ஐபோட் மற்றும் ஐபோன்களின் புதிய அப்டேட்டுகளான 2ஜி ஐபோட் டச் மற்றும் 3ஜி மற்றும் 4ஜி வசதியைக் கொண்டது. இந்த புதிய டிவைஸ் ஐபோன் 4ல் 3ஜி துணையுடன் எளிதாக இயங்கக்கூடியது.

இதன் விலை இந்தியாவில் ரூ.5,750ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot