எப்போதும் இசைக்குள் மூழ்கி கிடப்பவரா நீங்கள்.? உங்களுக்கொரு குட் நியூஸ் வித் அட்வைஸ்.!

இசையை கேட்பது மட்டுமே ஆய்வல்ல. இசை இயங்க ஆரம்பித்தபின், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு வகையாக அறிவாற்றல் சோதனைகள் வழங்கப்பட்டது.

|

"ஹெட்போனை கண்டுபிடித்தவனை மட்டும் நான் பார்த்தால், பட்டென்று காலில் விழுந்து நன்றி கூறுவேன்" எனக்கூறும் கோடிக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரென்றால் - நீயும் என் சகாவே.!

எப்போதும் இசைக்குள் மூழ்கி கிடப்பவரா நீங்கள்? உங்களுக்கொரு குட் நியூஸ்

சரி நேராக விடயத்திற்கு வருவோம். பொழுதுபோகாத நேரமாகினும் சரி, நீள் நெடிய பயணமாகினும் சரி, சுற்றியுள்ள தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக இருந்தாலும் சரி - இப்படியாக நீங்கள் காதுக்குள் ஹெட்போனை திணிக்க காரணம் எதுவாக இருப்பினும் - மகிழ்ச்சியான இசையை அதிகம் கேளுங்கள். இதை நான் கூறவில்லை, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சுமார் 155 பங்கேற்பாளர்களிடம் நிகழ்த்திய ஆய்வின் முடிவு கூறுகிறது.

நிதானம், மகிழ்ச்சி, சோகம்

நிதானம், மகிழ்ச்சி, சோகம்

மகிழ்ச்சியான இசைக்குச் செவிசாய்த்தால், உங்கள் படைப்பாற்றலானது அருவியாய் பாயும் மற்றும் அது புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும் என்று கூறினால் - நீங்கள் ஹேப்பி தானே அண்ணாச்சி.?. இந்த ஆய்வுக்கு உட்படுத்தவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதானம், மகிழ்ச்சி, சோகம் மற்றும் அவர்களின் (நேர்மறை/எதிர்மறை) உணர்ச்சியை பொறுத்த இசையை கேட்கவைக்கப்பட்டுள்ளனர். உடன் ஒரு குழுவினர் நிசப்தத்தையும் அனுபவித்துள்ளனர்.

அறிவாற்றல் சோதனைகள்

அறிவாற்றல் சோதனைகள்

இசையை கேட்பது மட்டுமே ஆய்வல்ல. இசை இயங்க ஆரம்பித்தபின், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு வகையாக அறிவாற்றல் சோதனைகள் வழங்கப்பட்டது. அந்த சோதனைகள் அவர்களின் மாறுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த (divergent and convergent) ஆக்கப்பூர்வமான சிந்தனையை சோதித்தன.

மாறுபட்ட படைப்பாற்றல்

மாறுபட்ட படைப்பாற்றல்

அதாவது நிகழ்த்தப்படும் சோதனையில் மிகவும் அசலான மற்றும் பயனுள்ள தீர்வுகளை கொண்டு வந்த பங்கேற்பாளர்கள் மாறுபட்ட படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள் என்றும் மறுகையில் சோதனைக்கான சரியான ஒற்றைத்தீர்வை கொண்டு வந்த பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைந்த படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள் என்றும் பிரிக்கப்படுவர்.

கிளாசிக்கல் இசை

கிளாசிக்கல் இசை

நிசப்தத்துடன் ஒப்பிடும் போது மகிழ்ச்சியான இசையைக் கேட்பவர்கள், குறிப்பாக நேர்மறையான மதிப்பும், தூண்டுதலும் மிக்க கிளாசிக்கல் இசையை கேட்பவர்களிடம் மிகவும் மாறுபட்ட படைப்புத்திறன் சிந்தனையை கொண்டுள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நிலையற்ற தன்மை

நிலையற்ற தன்மை

மகிழ்ச்சியான இசையில் நிலவும் நிலையற்ற தன்மையானது நமது நினைவில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கக்கூடும். அதாவது, நிசப்தத்தை காட்டிலும் மகிழ்ச்சியான இசைகள் கேட்பதின் மூலம் கூடுதல் தீர்வுகளை நம்மால் ஏற்படுத்த முடியுமென்பதை இந்த ஆய்வு வெளிபடுத்தியுள்ளது.

மலிவான மற்றும் திறமையான வழி

மலிவான மற்றும் திறமையான வழி

ஆகமொத்தம் இந்த ஆய்வு, இசை என்பது படைப்பாற்றலை மேம்படுத்தும் என்று கூறுகிறது. இந்த இடத்தில் பல்வேறு விஞ்ஞானம், கல்வி மற்றும் நிறுவன அமைப்புகள், படைப்பு சிந்தனைக்கு ஊக்கமளிக்க பயன்படுத்தும் மலிவான மற்றும் திறமையான வழிகளில் ஒன்றாக இசையை கையாளுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக மக்களே.. கேளுங்க கேளுங்க நல்ல இசையை கேட்டுக்கிட்டே இருங்க.!

Best Mobiles in India

English summary
Listening to happy music may boost creativity: study. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X