Home
Music

திறன் வாய்ந்த ஸ்பீக்கர்களுடன் புதிய எல்ஜி ஹோம் தியேட்டர்!

By Super
 திறன் வாய்ந்த ஸ்பீக்கர்களுடன் புதிய எல்ஜி ஹோம் தியேட்டர்!

எலக்ட்ரானிக்ஸ் துறையில் எல்ஜி நிறுவனத்திற்கு என்று தனி முத்திரை உண்டு. ஏனெனில் எல்ஜி நிறுவனம் எல்லா விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்களையும் அறிமுகப்படுத்துவதோடு அவற்றை உயர்ந்த தரத்திலும் வழங்குகிறது. இப்போது எல்ஜியின் புதிய தயாரிப்பு என்னவென்றால் எல்ஜி எச்பி906டிஎ ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகும்.

இந்த எல்ஜி எச்பி906டிஎ ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் சிறப்புகள் மிக அற்புதமாக உள்ளன. அதாவது இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் எல்ஜியின் சுப்பீரியர் சவுண்ட் கேலரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவைசிற்கு அருமையான ரிமோட்டும் உள்ளது. அதுபோல் கவரும் விதத்தில் 3டி ப்ளூரே எச்டிசி மற்றும் பிடி லைவ், சிம்பிலிங்க் மற்றும் க்ரேஸ் நோட் ஆகிய வசதிகளும் இந்த தியேட்டரில் உண்டு. அதோடு இதில் டோல்பை ட்ரூ எச்டி வசதியையும் இந்த டிவைசில் இருக்கிறது.

டிடிஎஸ்-எச்டி மாஸ்டர் ஆடியோ எஸ்ஸன்சியலையும் உள்ளடக்கி உள்ளது. இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இந்த டிவைஸ் யுஎஸ்பி இணைப்பு, எர்த்நெட் இணைப்பு மற்றும் மைக் ஜாக்குகளையும் இந்த டிவைஸ் வழங்குகிறது.

இந்த எல்ஜி தியேட்டரில் எப்எம் ட்யூனர், எச்டிஎம்ஐ அவுட், கம்போசிட் வீடியோ அவுட் மற்றும் கம்போனன்ட் வீடியோ அவுட் ஆகிய வசதிகளும் உள்ளன. மேலும் இதில் நேரடியான யுஎஸ்பி ரிக்கார்டிங்கையும் அனுபவிக்கலாம். அதுபோல் ஆட்டோ பவர் ஆப் மற்றும் 3டி மோட் ஆன்/ஆப் ஆகிய வசதிகளும் இந்த எல்ஜி தியேட்டரில் உண்டு.

இந்த எல்ஜி ஹோம் தியேட்டர் வால் மவுண்டபுள் டால் பாய் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் பார்ப்பதற்கு கம்பீரமாக உள்ளன. அதுபோல் இந்த டிவைசில் டிவிடி மற்றும் எம்பி3 பார்மட்டுகள் மற்றும் டபுள்யுஎம்எ ப்ளேபேக் ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. மேலும் எச்டி டிஐவிஎக்ஸ் மற்றும் எவிசிஎச்டி பார்மட்டுகளை சப்போர்ட் டெய்யும் டிஐவிஎக்ஸ் ப்ளேபேக்கும் இந்த டிவைசில் இருக்கிறது.

இந்த எல்ஜி டிவைசில் எப்எம் ட்யூனருடன் 50 பிரிசெட்ஸ் மற்றும் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்லைன் ஆடியோவும் உள்ளன. இந்த டிவைசின் ஒலி மிக அதிரடியாக இருக்கும்.

இந்த ஹோம் தியேட்டரில் 12 வகையான சவுண்ட் எஃபெக்ட் மோடுகள் உள்ளன. அவற்றை வழங்குவது விஎஸ்எம் மற்றும் சிம்ப்லிங்க் ஆகிய தொழில்நுட்பங்கள் ஆகும். மேலும் இதில் 3டி அனுபவமும் அருமையாக இருக்கும்.

இந்த எல்ஜி எச்பி906டிஎ ஹோம் தியேட்டர் சிஸ்டம் ரூ.30000 விலையில் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X