Home
News

சிறிய டிஸ்பிளே எதற்கு? மொபைல் விலையில் டேப்லெட்டே வாங்கலாமே! புது Lenovo Tab M10 ரெடி!

லெனோவா (Lenovo) நிறுவனம் அதன் டேப்லெட் வரிசையில் புதிதாக லெனோவா டேப் M10 (Lenovo Tab M10) என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையை விட மிக குறைந்த விலையில் இந்த டேப்லெட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய டேப்லெட் சாதனம் சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி பேட் 6 டிவைசுக்கு போட்டியாக வருகிறது. புதிய லெனோவா டேப்லெட் எம்10 சிறப்பம்சம் மற்றும் விலை தகவலை பார்க்கலாமா? இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 1200 x 2000-பிக்சல் தீர்மானம் கொண்ட, மிக பெரிய 10.61' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

சிறிய டிஸ்பிளே எதற்கு? மொபைல் விலையில் டேப்லெட்டே வாங்கலாமே!

லெனோவா டேப் பென் பிளஸ் என்று அழைக்கும் ஸ்மார்ட் ஸ்டைலஸ் சாதனத்தின் ஆதரவுடன் வருகிறது. இதன் டிஸ்பிளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் 400 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. ஹூட்டின் கீழ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வருகிறது. டேப்லெட் 7700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 12 மணிநேர வீடியோ பிளேபேக் அல்லது 11 மணிநேர உலாவல் நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. Lenovo Tab M10 5G வெறும் 490 கிராம் எடையுடன் 8.30mm தடிமன் உடன் வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த லெனோவா டேப்லெட் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்ஜை விரிவாக்க கூடிய அம்சத்துடன் வருகிறது.

இந்த டேப்லெட்டில் நானோ சிம் கார்டு ஸ்லாட் உள்ளது. இதன் பின்புறத்தில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 13MP பிரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு Lenovo Tab M10 5G ஆனது 8MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. டேப்லெட் புளூடூத் 5.1 ஐ ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது ரூ.24,999 என்ற விலையில் வருகிறது.

இது Flipkart மற்றும் Amazon வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இது லெனோவா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிரத்தியேக ஸ்டோர்ஸ் வழியாகவும் வாங்க கிடைக்கும். எதிர்பாராத சேதம் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகளைத் தவிர்க்க Lenovo Accidental Damage Protection One போன்ற டேப்லெட்டை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் சேவைகளையும் வழங்குகிறது.

பட்ஜெட் விலையில் சிறிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு பதிலாக, பெரிய டிஸ்பிளேவுடன் கூடிய அசத்தலான இந்த புது டேப்லெட் சாதனத்தை வாங்கி பயன்பறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M10 5G Tablet Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X