கின்னஸ் சாதனை புரிந்த 'மெகா' வீடியோ கேம் டிவைஸ்!

கின்னஸ் உலக சாதனை அமைப்பு வீடியோ கேம் சாதனைகளுக்கு என்று தனிப் பிரிவு வைத்திருக்கிறது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் வீடியோ கேம் கண்ட்ரோலர்களை வாங்குவதற்காக எதையும் செய்ய துணிபவர்கள் ஏராளமாக உள்ளனர்.
சமீபத்தில் நின்டென்டோ என்டர்டெய்ன்மென்ட் சிஸ்டம்ஸ் அல்லது ஜாய்பேட் கின்னஸ் சாதனை வீடியோ கேம் துறையில் விருது வாங்கியது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் அளவு 167 அடியாகும். இந்த என்இசி கன்சோல் கண்ட்ரோலர் லண்டனின் லிவர்பூல் செயின்ட் ஸ்டேசனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மிகப் பெரிய கேமிங் டிவைஸ் டெல்ப்டி யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த 3 மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. மிகவும் பிரபலமான இந்த நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த புதிய சிந்தனையுடன் களமிறங்கினர்.
இந்த மகா டிவைசை வடிவமைத்தவர்களில் மிக முக்கியமானவர் பிரிட்டிஷ் பொறியியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பென் ஆலன் ஆவார். ஆக பென் ஆலன் மற்றும் அவரது குழுவனரின் தீவிரமான முயற்சி மற்றும் உழைப்பினால் இந்த மகா டிவைஸ் வந்தது.
கின்னஸ் விருதை வாங்கும் போது தாங்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததாக பென் ஆலன் கூறுகிறார். அது அவர்களின் 5 மாத அயராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இந்த மெகா டிவசின் விலை 4000 பவுண்டுகள் ஆகும். மேலும் இந்த மெகா டிவைசை ஒருவரால் மட்டும் இயக்க முடியாது. இதில் விளையாட வேண்டும் என்றால் குறைந்தது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் வேண்டும். மேலும் இந்த டிவைஸ் மிகச் சிறப்பாக வேலை செய்வதாக தகவல்களும் வருகின்றன.


Click it and Unblock the Notifications