Home
Music

இந்தியாவில் இயர்போன்களை அறிமுகப்படுத்தியது கோஸ்

By Super
இந்தியாவில் இயர்போன்களை அறிமுகப்படுத்தியது கோஸ்

அமெரிக்க நிறுவனமான கோஸ் புதிய கேஇபி40 என்ற இயர்போன்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மிகத் தரமான ஒலி அமைப்பை வழங்குவதற்காகவே இந்த இயர்போன்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவற்றை எடுத்துச் செல்வதற்கும் மிக எளிதாக இருக்கும்.

கோஸ் கேஇபி40 இயர்போன்களை பரிசோதனை செய்த போது அவை தரமான ஒலி அமைப்பை வழங்குகின என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இவற்றில் பேஸ் ஒலி அதிகம் இல்லாததால் இதிலிருந்த வரும் ஒலி சற்று கணம் குறைந்து வரும். குறிப்பாக லவுங்கே இசை, கர்நாடக இசை மற்றும் ஹிப்-ஹோப் இசைகளை இவற்றில் கேட்கும் போது இந்த குறையை உணரலாம்.

இந்த கோஸ் கேஇபி40 இயர்போன்களை பவர்ஆம் மற்றும் ஊடூ கண்ட்ரோல் ப்ளஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை சப்போர்ட் செய்யும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் டேப்லட்டுகளில் இணைத்துப் பார்த்த போது அவை திருப்திகரமான இசையை வழங்கின. ஆனால் பேஸ் ஒலி அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்ற தகவல்தான் வந்தது.

ஆனால், கேஇபி40 இயர் பட்ஸ் உயர் ஒலி அளவுகளைக் கொண்டிருக்கவில்லை. இதன் ஒலியை கூட்டினாலும் போதுமானதாக இருக்கவில்லை. இதன் விலை ரூ.2,000. ஆனால் இதை விட தரமான ஒலி அமைப்பைக்கூடிய இயர்போன்கள் இதை விட குறைந்த விலையில் வருகின்றன.

இந்த கோஸ் கேஇபி40ன் விலையும் இதன் உயர்தரமில்லாத ஒலி அமைப்பும் இந்த இயர்போன்களுக்கு பின்னடைவையே தருகின்றன. இதன் டிஸைனைப் பார்த்தால் அது பாதுகாக்கக்கூடிய அலுமினிய உறையுடன் வருகிறது. அதனால் இது கீழே விழுந்தாலும் உடைவதில்லை.

மேலும் இந்த இயர் பட்சுகளில் ரப்பர் ரிங் உள்ளதால் அது நமது காதுகளோடு மிக எளிதாக பொருந்தி விடுகிறது. கீழே விழுந்து விடும் என்ற பயமில்லை. இந்த இயர்பட்ஸ் 3 வகையான அளவுகளில் சிலிகான் இயர் டிபிஸ் கொண்டு வருகிறது. அதனால் நமக்கு பொறுத்தமான அளவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் அது மிகத் தரமாகவும் இருக்கிறது.

கோஸ் கேஇபி40 4 அடி நீளமுள்ள கேபிளுடன் வருவதால் இதைத் தூரத்திலிருந்த நமது டேப்லெட் அல்லது லேப்டாப் போன்றவற்றோடு மிக எளிதாக இணைக்க முடியும். மொத்தத்தில் கோஸ் கேஇபி40 இன்னும் தரமான பேஸ் ஒலி அமைப்பு கொண்டு வரலாம். அப்போது கண்டிப்பாக அது வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X