ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் போர்ட்டா ப்ரோ ஹெட்போன்கள்!

Posted By: Karthikeyan
ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் போர்ட்டா ப்ரோ ஹெட்போன்கள்!

இந்த ஆண்டு இதுவரை இரண்டு மிக முக்கிய எலக்ட்ரானிக் நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. அதாவது லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சி மற்றும் மேக்வேர்ல்டு/ஐவேர்ல்டு கான்பரன்ஸ் போன்ற இந்த 2 நிகழ்வுகள் வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் ஏராளமான கெட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

குறிப்பாக மேக்வேர்ல்டு நிறைய ஆப்பிள் டிவைஸ்களுக்கான அக்சஸெரீஸ்களை அறிமுகப்படுத்தியது. இந்த கண்காட்சி முடிந்த பிறகும் கூட நிறைய இணைய தளங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்ற டிவைஸ்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன.

அதிலும் குறிப்பாக கோஸ் கார்ப்பரேசனின் புதிய சூப்பர் கூல் டிவைஸ் அவற்றில் முக்கிய இடம் பெறுகிறது. அதாவது கோஸ் அறிமுகப்படுத்தும் போர்ட்டா ப்ரோ என்ற புதிய ஹெட்போன் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த போர்ட்டா ப்ரோ ஹெட்போன் ஒரு தரமான மற்றும் இனிமையான இசையை வழங்கக்கூடிய டிவைஸ் ஆகும். கோஸ் நிறுவனம் மீண்டும் இந்த ஹெட்போனை கொண்டு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது கோஸ் இந்த போர்ட்டா ப்ரோ ஹெட்போனைப் புதுப்பித்து மிக விரைவில் களமிறக்க இருக்கிறது.

இந்த புதிய போர்ட்டா ஹெட்போன் மிக ஸ்டைலாக இருக்கிறது. அதுபோல் கேடிசியின் ரிமோட் மற்றும் ஆப்பிள் ஐ டிவைஸ்களால் தரச்சான்று பெற்ற மைக்ரோபோன் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதைப் பயன்படுத்துவோர் இந்த ஹெட்போனில் பாடல் கேட்க முடியும். அத்தோடு வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும். இந்த ஹெட்போனில் இன்டர்லாக்டு இயர் பட்சுக்கள் உள்ளன. இவை காதுகளிசல் கச்சிதமாகப் பொருந்தக்கூடியவை.

இந்த போர்ட்டா ப்ரோ ஹெட்போன்கள் ஐஎல்-100 மற்றும் ஐஎல்-200 என்ற 2 மாடல்களில் வருகின்றன. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஐஎல்-200 ஐபோன்களுக்கு உரிய இன்லைன் ரிமோட்டைக் கொண்டுள்ளது. இந்த ஹெட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்