Home
Music

கோடக் வழங்கும் அதி நவீன கேமரா!

By Karthikeyan
கோடக் வழங்கும் அதி நவீன கேமரா!

டிஜிட்டல் ஸ்டில் கேமராக்களின் மிக முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவற்றில் தரமான வீடியோ ரிக்கார்டிங் வசதிகள் இல்லை என்பதாகும். அதே பிரச்சினை வீடியோ கேமராக்களிலும் உள்ளது. அதாவது அவற்றில் மிகத் தரமான துல்லியமான படங்களை எடுக்க முடியாது. அதனால் வீடியோ மற்றும் படங்களை ரிக்கார்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்காக தனியாக 2 டிவைஸ்களை எடுத்துச் செல்ல வேண்டும். அது எளிதாகவும் இருக்காது. அதே நேரத்தில் இடங்களையும் அடைத்துக் கொள்ளும்.

கோடக் நிறுவனம் இப்போது இந்த பிரச்சினையை ஆய்வு செய்து அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் புதிய கேமராவை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கோடக்கின் புதிய கேமராவின் பெயர் ப்ளேபுல் டூவல் கேமரா ஆகும். இந்த கேமரா போட்டோ மற்றும் வீடியோ எடுக்கு டிவைஸ்களுக்கிடையே உள்ள இடைவெளியை களைந்துவிடும்.

இந்த ப்ளேபுல் கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு வினாடிக்கு 60 பிரேம் வேகத்தில் 1080பி வீடியோவை ரிக்கார்டிங் செய்யும் திறன் கொண்டது. அதுபோல் இந்த கேமராவில் ஆடியோ ரிக்கார்டிங், 4எக்ஸ் சூம், டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேசன் போன்ற வசதிகள் உண்டு.

அடுத்ததாக இந்த ப்ளேபுல் கேமரா 3 இன்ச் அளவில் டிஎப்டி வண்ண எல்சிடி டிஸ்பிளேயைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள உயர் ஐஎஸ்ஒ குறைந்த வெளிச்சத்திலும் தரமாக வீடியோவை ரிக்கார்ட் செய்ய உதவுகிறது. மேலும் இது 12 மெகா பிக்சல் ஸ்டில் கேமரா ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் லென்ஸ் அதிகமான அகலத்தைக் கொண்டது. அதாவது இந்த லென்ச் போட்டோ எடுப்பதற்கு 26 மிமீயும் வீடியோவுக்கு 31 மிமீயும் வழங்குகிறது. மேலும் இந்த கேமராவில் பிஎஸ்ஐ சிம்ஒஎஸ் சென்சார் மற்றும் பில்ட் இன் செனோன் ப்ளாசும் உள்ளன.

இந்த ப்ளேபுல் கேமராவில் உள்ள 3 இன்ச் டிஸ்ப்ளே மூலம் வீடியோவை மிகச் சிறப்பாக ரிவீயூவ் செய்ய முடியும். மேலும் இதில் எக்ஸ்டர்னல் மைக்ரோபோன் அல்லது ஹெட்போன் ஜாக் உள்ளதால் இதில் துணை ஆடியோ ரிக்கார்டிங் மற்றும் ரிவியூவிங் வசதிகளைச் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த கேமரா டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேசன் கொண்டிருப்பதால் போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் போது கேமரா அசைந்தாலும் போட்டோவோ அல்லது வீடியோவோ சற்றும் துல்லியம் குறையாமல் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இந்த கேமரா 3200 ஐஎஸ்ஒ வரை வழங்குகிறது.

இதன் 12 மெகா பிக்சல் பிஎஸ்ஐ சிஎம்ஒஎஸ் சென்சார் மிகமிக துல்லியமான படங்களை எடுக்க உதவுகிறது. அதுபோல் இதில் இரண்டு அகலமான லென்சுகள் உள்ளன. அதாவது படங்கள் எடுப்பதற்காக 26 மிமீ லென்சும் வீடியோ ரிக்கார்டிங் செய்வதற்காக 31 மிமீ லென்சும் உள்ளன. மேலும் இதில் எடுக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை இதன் டச் ஷேர் பட்டன் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு அனுப்ப முடியும். குறிப்பாக யுடியூப் மற்றும் மற்ற சோஷியல் நெட்வொர்க்கிங் இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும்.

இந்த கோடக் ப்ளேபுல் டூவல் கேமராவின் விலை ரூ.12,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X