கிலிப்ஸ் ஹெட்போன்... பேஸ் சவுண்டு பிரமாதம்!

Posted By: Staff
கிலிப்ஸ் ஹெட்போன்... பேஸ் சவுண்டு பிரமாதம்!

தொழில்முறையில் இசை உலகில் இருப்பவர்கள் மத்தியில் கிலிப்ஸ் ஹெட்போன்கள் வெகு பிரபலம். இதற்கு முக்கிய காரணம், அத்துனை துல்லியம். கிலிப்ஸ் ஹெட்போன்கள் நன் மதிப்பை பெற்றுள்ளதற்கு அதன் துல்லியமான இசையை சரியான விகிதத்தில் வழங்கும் தொழில்நுட்பம்தான்.

இந்த நிலையில், கிலிப்ஸ் நிறுவனம் தற்போது ஏராளமான ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், இமேஜ் ஒன் என்ற பெயரில் வந்துள்ள ஹெட்போன் மார்க்கெட்டில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த புதிய ஹெட்போன் வடிவமைப்பு சூப்பர் என்று கூற வைக்கிறது.

முழுவதுமாக கருப்பு கலரில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் இயர் பேடு லெதரால் நெய்யப்பட்டுள்ளதால் இதமாக இருக்கும். இதன் ஹெட்பேண்டு வடிவமைப்பு மிகச்சரியாக தலையில் பொருத்திக்கொள்ளலாம் என்பதால் நீண்ட நேரம் இசையை கேட்டாலும் காதுகளில் தொந்தராக தெரியாது.

இதில், கால் இஞ்ச்சுக்கு அடாப்டர் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சிறிய ஹெட்போனை இணைத்துக்கொள்ள முடியும். மேலும், சிறந்த தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் பேஸ் சவுண்டில் பிரமாதமாக இருக்கும். இதில், இரைச்சல் தடுப்பு தொழில்நுட்பமும் இருப்பதால் ஆனந்தமாக இசையை கேட்டு ரசிக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot