Home
Music

ஜேவிசி வழங்கும் பன்முக பயன்பாட்டு ஐபோன் டோக்!

By Karthikeyan
ஜேவிசி வழங்கும் பன்முக பயன்பாட்டு ஐபோன் டோக்!

வீடுகளில் ஆப்பிள் ஐ டிவைஸ்களை ஆடியோ சிஸ்டமாக பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்காகத் தனியாக ஸ்பீக்கர் டோக்கிங் சிஸ்டம் இருப்பது அவசியமாகிறது. பல நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்பீக்கர்டோக்குகளை சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றன. மேலும் ஆப்பிள் ஐபோனுக்கு என்று நிறைய ஸ்பீக்கர் டோக்குகள் உள்ளன.

இந்த ஸ்பீக்கர் டோக்குகளில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவற்றை வைப்பதற்கு பெரிய இடம் தேவைப்படும். அதனால் நமது தனி அறை அல்லது படுக்கை அறையில் இவற்றை வைத்தால் இவை அந்த அறைகளை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அதனால் அறைகளில் தாராளமாக இடம் கிடைக்காது.

இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஜேவிசி நிறுவனம் இப்போது முன்வருகிறது. அதாவது இந்த நிறுவனத்தின் புதிய டிவைஸ் நைட் ஸ்டேன்டையே ஐபோன் ஸ்பீக்கர் டோக்காக மாற்றுகிறது. இந்த புதிய டிவைசின் பெயர் ஜேவிசி என்-பிஎக்ஸ்3 ஆகும். முதலில் இந்த டிவைசைப் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத் தெரியும். இந்த டிவைஸ் நைட் ஸ்டேன்ட் ஸ்டைலில் வருகிறது.

இந்த ஜேவிசி டிவைஸ் கருப்பு மற்றும வெள்ளை நிறங்களில் வருகிறது. இதன் அடிப்பக்கம் உறுதியாக உள்ளதால் இதை எளிதில் நிற்க வைக்க முடியும். இதன் உயரம் சாதாரணமான கட்டிலின் உயரத்தைப் போல் இருக்கும். மேலும் இந்த டிவைஸ் மிகவும் ஸ்டைலாகவும் இருக்கும்.

இந்த டிவைசின் முகப்பில் ஐபோன் டோக் இருக்கும். அதுபோல் பல்வேறு பட்டன்கள் இதன் முன்புறம் இருக்கின்றன. மேலும் இதில் ஒரு சிறிய டிஸ்ப்ளே ஐடி உள்ளதால் அதன் மூலம் இசையின் ஒலி அளவு, மற்றும் பாடலின் பெயர்கள் மற்றும் ட்ராக் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஜேவிஜி டிவைஸ் 30 வாட்ஸ் கொண்ட எஸ்ஆர்எஸ் ஸ்டூடியோ சவுண்ட் எச்டி ஸ்பீக்கர்களை வழங்குவதால் இதில் இசை கேட்பதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த டிவைஸை ஒரு மேசையாகவும் பயன்படுத்தலாம். இந்த ஜேவிசி டிவைசின் விலை ரூ.26,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X